Posts

Showing posts from September, 2019

trees on every hill thenpennai phase I sep 2019

Image

ice man of India Mr. Chewang Norphel

Image
லடாகின் தண்ணீர் மனிதர் பத்ம ஸ்ரீ விருது பெற்ற திரு . செவாங் நார்பெல் . உலகத்தின் மிக  உயரத்தில் இருக்கும்  பாலைவனமான இந்தியாவின் வடக்கு மாநிலமான லடாக்கில் உரை பனி மலைகளிலிருந்து ஜூன் ஜூலை மாதங்களில் வெயிலில் உருகி இந்து நதி  ஒடி வந்தால் தான்  குடிக்க தண்ணீர் என்றளவில்  விவசாயம் என்பதே எட்டாக்கனி . விவசாயம் செய்ய வேண்டும் என்றால் லடாக்கில் ஏப்ரல் மாதத்திலேயே தண்ணீர் தேவை. இதனை  உணர்ந்த சிவில் பொறியாளரான திரு . செவாங் நார்பெல் நதி பனியில் உறையும் நேரங்களில் நதிகளின் குறுக்கே தடுப்பணைகளை மிக எளிமையாக  கட்டி  உறைந்த தண்ணீரை சேமித்து அந்த உறை பனி மலைகளின்  அடிவாரங்களில் ஏப்ரல் மாதத்திலேயே உருகுவதை பயன்படுத்தி விவசாயிகளின் தண்ணீர் தேவைக்கு  வழி வழிவகுத்துள்ளார். லடாக்கின் தண்ணீர் கஷ்டத்தினை தீர்க்க தீர்க்கதரிசனமாய் கையாண்ட திரு .செவாங் ஒரு பொறுப்புள்ள குடிமகன். அவரின் வழியை நாமும் பின்பற்றுவோம் .