Posts

Showing posts with the label கரோனா

Quit Cities CORONA call

Image
  கரோனா பெருந்தொற்று சொல்லும் உரத்த செய்தி CORONA calls for a change in Human attitude நகர் விட்டு நகர் -  நெருக்கடியான நகர வாழ்க்கையில் தான் இந்த கரோனா கிருமி நோய் தொற்று அதிக உயிரிழப்புகளை நகரங்களில் தான் ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும் காற்றும் நீரும் பெருமளவு சுத்தமாக இருப்பதாலும் கிராமங்களில் பெருமளவு தொற்று பாதிப்பு  குறைவாக இருந்தது. அதனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் இதுவே கிராமங்களை நோக்கி திரும்ப வேண்டிய தருணம்.  நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் கூடிய விரைவில் ஒரு நல்ல கிராமத்தை தேர்ந்தெடுத்து குடியேற வேண்டும். நுகர்வை குறை -  இன்று பூமியை நாம் ஒரு பெரிய குப்பைக் கூளம் ஆக்கிவிட்டோம். மலைகளை வெறும் இரும்பாக, அலுமினிய ஃபாயில்லாக்கி , மண்ணை குடைந்து எண்ணை எடுத்து அதனை பிளாஸ்டிக் ஆக்கி கடல் வாழ் உயிரினங்களைக் கூட நிம்மதியாக வாழ விடாமல் செய்துவிட்டோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சி செய்வோம்.  அவசிய தேவையின்றி ஒரு பொருளையும் நாம் நுகர்தல் கூடாது. கிராமம் புகு -  சென்னை பெ...

Corona Lessons TO mankind

Image
கரோனா கற்று தந்த பாடம்  கரோனா என்பது ஒரு சாதாரண கிருமி தானே என்ற மனிதரின் அலட்சியத்தை இயற்கை ஒரு சின்ன உயிரி கொண்டு தனது பேராற்ற்லை வெளிப்படுத்தியுள்ளது. “ இயற்கைக்கு திரும்பும் பாதை ” என்று மனித இனத்தை இயற்கை நோக்கி திருப்ப வேளாண் விஞ்ஞானிகள் நம்மாழ்வார் அய்யா, ஜப்பானிய மசானபு அய்யா மற்றும் வள்ளலார், வேதாத்ரி மகரிஷி போன்ற மெய்ஞானியர் கொடுத்த அறைகூவலுக்கு செவிமடுத்து இயற்கை என்னும் பேராற்றல் மிகச் சிறிய உருவங்கொண்டு யானையையே அடக்கிவிட்ட இறுமாப்புடன் சுற்றி வந்த மனித இனத்தை வீட்டை விட்டே வெளி வராமல் முடக்கி, இறந்த உறவினரை காணக் கூட முடியாமல் மனிதன் வந்த சுவடே தெரியாமல் அழிக்க தொடங்கியுள்ளது.   ஒரு கிருமி மனிதனை முடக்கியவுடன் இது வரை மாசு மண்டி போயிருந்த பூமி இன்று தூசு இல்லாத காற்று, சுத்தமான நீர் , விலங்கில்லாத விலங்கினங்கள் என்று அனைத்தும் மனிதனிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. அதனால் மனித இனம் இதில் கற்றுக் கொண்ட பாடங்களை இயற்கைக்கு மதிப்பளித்து மீண்டும் வாழ இயற்கை கொடுத்த வரமாக ஏற்று தரமோடு வாழ்வோம். முதல் பாடம் - கிராமங்களுக்கு திரும்புவோம் இர...