Posts

Showing posts with the label நம்மாழ்வார்

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

Image
 நம்மாழ்வாரை தேடி-  பயணம் -2 நம்மாழ்வார் தெரு பெயர் பலகை இட்டு 5 வருடங்கள் நிறைவும் நம்மாழ்வார் அய்யாவின் 87 ம் பிறந்த நாளை கொண்டாடு விதமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாச்சார் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இணைந்து கொண்டாடினோம். கடும் வெயில் நேரத்திலும் "இயற்கை திரும்பும் பாதை"யின் அவசியத்தை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ண குமார், இந்த கடும் வெயிலே நம்மாழ்வார் விட்டு சென்றுள்ள இயற்கை மீட்பு பணியை இன்னும் வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் விளக்கினார். இந்த கிராமத்தின் முன்னோடி இயற்கை வழி விவசாயி திரு தசரதனின் பிள்ளைகள் செல்வன். யோகேஷ், செல்வி வேணி, செல்வி புவி ஆகியோர் நம்மாழ்வார் பற்றிய தங்களின் புரிதலை மழலை மொழியில் வெளிப்படுத்தினர். தங்கள் தலைமுறையிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் என்று உறுதி மொழி அளித்தனர், நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் போது தான் திரு தசரதனின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் கிடைத்தது . இது வரை வெறும் ஜாதக குறிப்பாக தமிழ் மாதமும் பிறந்த நட்ச...

நம்மாழ்வாரை தேடி - பயணம் 1

Image
                                   நம்மாழ்வாரை தேடி - பயணம் 1                                                                நம்மாழ்வார் ... நம்மை   ஆள்வார் 20ம் நூற்றாண்டு தொடங்கையதில் இருந்து இயற்கையின் மீது பல்ருக்கும் ஆர்வம் அதிகரித்து வந்தது. பலருக்கும் இயற்கையை பற்றிய சரியான புரிதலை பெற ஒரு வழிக்காட்டியை தேடி வந்தனர். அந்த சமயத்தில் இயற்கை வழியில் வாழ்வியலை அமைத்து கொள்ள ஒரு விடிவெள்ளியாக வழிக்காட்டியாக வந்தார் இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி திரு. கோ. நம்மாழவார். அந்த சமயத்தில்; அந்த காந்தத்தை அந்த ஏகாந்தம் மிகு வானகத்தில் கண்டு, உரையாடினோம் பலர். 2013ல் அவரின் பயிற்சி பட்டறையில் தீட்டப்பட்ட பொறுப்புள்ள இயற்கை ஆர்வலர்கள் பலர். அந்த படம் இதோ. அந்த படத்தில் இடது பக்க ஓரமாக குத்துகாலிட்டு கு...

நம்ம ஆழ்வார்களை போற்றுவோம் Hail Nammazhwars

Image
  இன்று (30.12.2024) இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி தெய்த்திரு. நம்மாழ்வார் அய்யா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள். அய்யாவின் உருவம் தான் மறைந்ததே அன்றி அவரின் உணர்வு இன்று எண்ணற்ற இயற்கை வழி விவசாயம் செய்யும் பல உழவர்களிடம் ஊடுபாவாக நிறைந்தே காணப்படுகிறது. கத்தியின்றி, இரத்தம் இன்றி ஒரு உண்மையான பசுமை புரட்சியை அய்யா பல்வேறு கிராமங்களுக்கும் நடந்து கூட சென்று பல நல்ல உள்ளங்களில் உள்ளொளியை ஏற்றி வைத்தார்கள். இன்று பல இளைஞர்களும் காணி நிலமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஊட்டியவர் நம்மாழ்வார் அய்யா.  அவரின் பெயரின் மூலக் காரணமான முதலாம் நம்மாழ்வாரையும் இன்னாளில் நினைவு கூறுவோம். ஆழ்வார்கள் அனைவரும் மார்கழி மாதத்தை பெருமாளை முழுவதுமாக வணங்குவதற்குரிய மாதாமாக என்றும் கொண்டாடியவர்கள்.  முதலாம் நம்மாழ்வாரும் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் இறைவனை கண்ட ஒரு சிறந்த தத்துவ பேரறிஞர். அவர் என்றென்றும் தான் பெற்ற ஞானத்தை ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தே அருளினார்கள். மரத்தினடியே இயற்கையில் இறைமையில் லயிக்க, பிரபஞ்ச பேராற்றலை உணர ஒரு உன்னத தலமாக போற்றியவர்.  நம் கால நம்மா...

Ramana Maharishi Nammazhwar

Image
  இந்த மாபெரும் பிரபஞ்சம் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உயர் பிரபஞ்ச ஞான நிலையை அடைய பல்வேறு வழிக்காட்டிகளை அனுப்பிய வண்ணம் இருக்கிறது. இந்த உலகில் பல்வேறு உயிரினங்களும் ஆனந்த நிலையில் வாழ சதா முயன்று வருகின்றன.  அதற்கு ஒவ்வொரு உயிருக்கும் பல சூழ்நிலைகளில் வழிக் காட்ட சில வழிக் காட்டி உயிரினங்களை இயற்கை அனுப்பி கொண்டிருக்கிறது.  டிசம்பருடன் தொடர்புடைய இரண்டு மாபெரும் வழிக்காட்டிகளை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் போற்றி பணிகிறது.   மண்ணை நெகிழ வைக்கும் விஞ்ஞானத்தை அன்புடன் ஊட்டி அதன் மெய் ஞானத்தை உலகோர்க்கு வழிக்காட்டியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா. அவர் மண்ணில் விதையாகி ( 30/31-12-2013 ) இன்றோடு 8 ஆண்டுகள் ஆகின்றது.  மனதை நெகிழச்செய்து இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் மாறா அன்பை வாழ்ந்து காட்டி வழிக் காட்டியவர் இரமண மகரிஷி. விவசாயமும் ஆன்மீகமும் இரண்டு வெவ்வேறு பாதைகள் போல் தோன்றினாலும் விவசாயமும் ஒரு மெய் ஞான அனுபவமே. திரு இரமண மகரிஷி போதித்த அனைத்து உயிர் ஆராதனைகளையும் தினம் தினம் தன் வயலில் நிகழ்த்தி நிகழ காண்பவர் விவசாயி.  ஒவ...

Tree Man Sunderlal Bahuguna Chipko

Image
            மரங்காவலர் சுந்தர்லால் பகுகுணா அய்யா படம் வரைந்துள்ள ஒவியர் திரு சதிஷ் ஆச்சார்யாவிற்கு நன்றி சிப்கோ இயக்க நிறுவனரும் சூழலியலாளருமான திரு. சுந்தர்லால் பகுகுணா  அய்யா இன்று 21.5.21 இயற்கேயோடு இரண்டற கலந்தார். மண்ணிற்கு உரமானார். சுந்தர்லால் பகுகுணா  (1927-2021) காந்தியவாதியும் இந்தியாவின் ஆரம்பகால சூழியல் போராளிகளில் ஒருவரும் ஆவார். இமையமலைக் காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தைத் துவங்கினார். கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சூழியல் அழிவுகளை எதிராகப் பல போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். இமையமலைக் காடுகள் வேகமாக வெட்டி அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் காடுகளைப் பாதுகாக்கும்பொருட்டு சிப்கோ இயக்கம் துவங்கப்பட்டது. 1970களில் இமியமலைப் பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் வழக்கத்தைவிட அதிக அளவில் நிகழ்ந்தன. காடழிப்பும் பெரிய கட்டுமானங்களுமே அவற்றுக்குக் காரணம் என மக்கள் நினைத்தனர். இந்நிலையில் 1974ம் வருடம் மார்ச் 24ம் தேதி ரேனி என்னும் கிராமத்தின் ஆண்கள் எல்லாரும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ...