Posts

Showing posts with the label மலைமஞ்சனூர்

Re-treeing Hill of Malamanjanur Tiruvannamalai மரம் மறு முயற்சி மலைமஞ்சனூர்

Image
  எ ங்களுக்கு தொடர்ந்து சவால் கொடுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் மலைமஞ்சனூரில் இளம் காலையிலே மேகமெனும் மஞ்சையும் ஊடுருவி மலை முழுவதும் புல்லான மஞ்சம் புற்களின் மீதே நறுமணம் வீச எங்களது பசுமை மலைமஞ்சனூர் பொறுப்புள்ள இளைஞர்களுடன் விக்கிரமாதித்தனும் வேதாளம் கதையை போல் இந்த வருடமும் மலை மீது மரம் வைக்க 6.11.2022 சென்றோம். In the early morning dusky Sunday morning walked through the clouds to the aromatic land (aroma of the grass - Manjam Pil ) of Malamanjanur in Tiruvannamalai District in Tamizh Nadu. we have been doing these repeated exercises of planting trees on this hill with our Pasumai Malamanjanur Responsible Youth Club on 6.11.2022. போ ன வருடம் ஓடைகள் ஓடி வரும் பாதையில் மரக் கன்றுகளை நட்டோம். ஆனால் வழக்கம் போல் சிலர் நெருப்பு மூட்டி மகிழ்ந்ததால் நாங்கள் வைத்த மரங்கள் தீக்கிரையாகின. அதனால் இந்த முறை உச்சி மலைக்கு சென்று 6 அடி வளர்ந்த பூவரசு கன்றுகளை நட்டோம். Last year we planted the trees on the path of the rivulets flowing down the hill. But early this year some miscreants ligh...

மலைமஞ்சனூர் மலை மரம் மழை

Image
  அக்டோபர் 3ம் தேதி மலையில் குழி எடுத்து விட்டு பின்னர் நன்றாக மழை பெய்த பின்னர் மரக் கன்று நடலாம் என்று முதலில் திட்டமிட்டோம். ஆனால் இயற்கை அன்று விடியற்காலை முதல் தூவானம் வீசியபடி எங்களை வரவேற்றது. மழை தூறலின் போது மலையில் ஏறலாமா என்று சிறிது தயங்கிய போது வானம் வெளுத்து எங்களை மலையேறி வரச் சொன்னது.  The Forest Way , Tiruvannamalai  அமைப்பு மலையில் மரங்கள் நடுவதற்காகவே எங்களுக்கு அன்று ஆல அரச கன்றுகள் தந்து உதவினர். அந்த அமைப்பின் திரு . கார்த்திக் மற்றும் இயற்கை நிழற்படக் கலைஞர் திரு. குமார் எங்களுக்கு பெரிதும் உதவினர். மலைகளுக்கு யாராவது தீ வைத்தாலும் மரங்களுக்கு பரவாமல் தடுக்கும் முறைகள் அவர்கள் திருவண்ணாமலையில் பின்பற்றும் முறையை விளக்கி தந்தார்கள். கடந்த மூன்று வருடங்களாக எங்களுடன் இணைந்து இந்த மலையை பசுமையாக்கும் முயற்சியில் , இப்போது " பசுமை மலைமஞ்சனூர் பொறுப்புள்ள இளைஞர் சங்கமாக "  உருவாகி திரு, செல்வ குமார், திரு சூர்ய மூர்த்தி மற்றும் நண்பர்கள் எங்கள் குழுவிற்கு உதவ முன் வந்தனர். அது போல் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தண்டராம்பட்டு ஷாகாவின் திரு. பார்த்தசாரதி, தி...