Rain clouds to Karnataka - Dam it கர்நாடகா செல்லும் மழை மேகங்களுக்கு அணை கட்டுவோம்
வருடாவருடம் காவிரி நீர் பகிர்தலில் வரும் சங்கடம் இந்த ஆண்டு இன்னமும் அதிகரித்து பெங்களுரு நகரத்திற்கு தண்ணீரே இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தண்ணீரை வைத்து வெற்று அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சிகளோடு பொறுப்பில்லாமல் விளையாடி " தண்ணீர் தரமாட்டேன் தண்ணீர் தரமாட்டேன் " என்று சொல்லச் சொல்ல இன்று கர்நாடகாவின் தலை நகரமான பெங்களுரு தன் கொள்ளளவை காட்டிலும் அதிக மக்களையும் கட்டிடங்களையும் நிரப்பி இன்று மிக மோசமான தண்ணீர் தட்டுபாட்டில் தவித்து பல மக்கள் அன்றாட குடி நீர், குளிக்க நீர் இல்லாமல் தவிக்கிறார்கள். 1. காடுகளை அழிப்பது வளர்ச்சி அல்ல Destroying Forests is not Development இதற்கு நிரந்திர தீர்வு - மனிதனால் இதுவரைக்கும் உருவாக்கவே முடியாத மலைகளில் அடர்வன காடுகள் வளர்வதற்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவதே. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் வளர்ச்சி என்ற போர்வையில் பல காடுகளில் சாலைகள் போட்டு வனங்களின் அடர்த்தியை குறைத்து விட்டோம். இதனால் அளவோடு பல மாதங்களில் பெய்த பருவ மழை இன்று சில நாட்களில் அடர் வெள்ளமாக பெய்துவிட்டு போய்விடுகிறது. 2. மலைகள் தோற...