Posts

Showing posts with the label trees

Raksha Bandhan 2026

Image
 

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Image
  மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள்   கசிவு நீர் குட்டையில்  பழ மரக் கன்றுகளை நட்டோம்.  இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

Image
காசி விஸ்வநாத்ர் ஆலயம் - குளம் மீட்டெடுத்து சுற்றி மரக் கன்றுகள் நட்டோம். மலையனூர் செக்கடி கிராமம், திருவண்ணாமலை மாவட்டம். Kasi Viswanathar Temple Tank encroachment removal & restoration of Temple Tank & tree plantation. Malayanoor Chekkadi Village, Tiruvannamalai District. காசி விஸ்வநாதர் கோவில் நிரவாகிகளின் திற்மையான செயல்பாட்டால் கோவிலின் குளம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. அதனை சுத்தம் செய்து வேலி அமைத்து 21.9.2025 அன்று பலவித மரக் கன்றுகளையும் கிராமத்து பொறுப்புள்ள குடிமக்களின் முன்னெடுப்பால் மரங்களுக்கு குழிகள் எடுத்து மரங்கள் நட்டோம். With the efficient initiative of the Trustees of Kasi Viswanathar Kovil trust, encroachment around the Temple tank was removed, cleaned, fenced and then trees were planted by the Responsible Citizens of the Village. நூற்றுக் கணக்கான மரக் கன்றுகளை தருவித்து கிராமத்து இளம் தளிர்கள் புடை சூழ " மரங்களை காப்போம் " என்ற உறுதி மொழி எடுத்து மரங்களை நட்டோம். இந்த காணொளியை காணுங்கள்  https://youtu.be/COAmBuhvs04   Watch This video. Wi...

Green Kona Malai பசுமை கோண மலை

Image
முருகன் சிலைக்கு பின்பும் அரச மரம் நட்டுள்ளார்கள்  திருவண்ணாமலையில் 13 டிசம்பர் 2024 அன்று கார்த்திகை தீபம் ஏற்றும் சமயத்தில் மாவட்டத்தின் தாணிப்பாடி வட்டத்தில் உள்ள கோண மலையில் -பொறுப்புள்ள இளைஞர்கள் சிலர் 40 மரக் கன்றுகளை அன்று பெய்த மழை ஈரத்திலேயே குழி எடுத்து மரக் கன்றுகளை நட்டு தங்கள் கிராமத்தின் மலைகளை பசுமையாக்குவது தங்கள் பொறுப்பு என்ற நம்பிக்கை ஒளியை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளார்கள். On 13th Dec 2024 - Karthigai Deepam -Light was lit atop the Tiruvannamalai Hills. At the same time in the same district, Near Thanipadi town, using the wetness of overnight rain, Youth from the town planted 40 trees saplings including many fruit tree saplings on the Kona Malai Hill. This enlightened the possibility for greening many hills in this region to us at Responsible Citizens iyakkam. குறிப்பாக நண்பர்கள் திரு. மோகன் மற்றும் திரு. சங்கர் இருவரும் மிகவும் பொறுப்புடன் கடந்த 6 மாதங்ககளாகவே தாணிப்பாடி ஊருக்குள் பல இடங்களில் மரக் கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார்கள்....

திருவண்ணாமலை மரம் வளர்ப்போர் சங்க நிறுவனர் திரு ஜெகம் இராதாகிருஷ்ணன் இன்று விதையானார்

Image
  தன் வாழ்நாள் முழுவதும் மரங்களே மூச்சாக வாழ்ந்த  பலர் மனதிலும் மரங்கள் நட  தூண்டிய,  திருவண்ணா மலை  மாவட்டத்தில் பல   கிராமங்களிலும் மரங்கள் நட்ட அய்யா இன்று  தானும்  விதையானார். அவர் நினைவையும் அவர் பணியையும் அவர் நட்ட மரங்கள் பறை சாற்றும். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் Responsible Citizens iYakkam 1st Nov 2023  

Tree on the Rock is the Guru கல் ஆலமரமே குரு

Image
  In the Saiva Siddhanta , Lord Siva is worshipped as the Guru Dakshina Murthy. The Guru is depicted as a Human face carved out of a Tree. This is to show the importance of the tree as a source of wisdom, as Trees are constantly in sync with universe and all the ancient sages did their penance under the trees to acquire the universal wisdom  available in abundance under the trees. In this picture below, four sages are seated near to their Guru on either side and the philosophy says that the four acquired their knowledge without even uttering a single word with the Guru, which eventually means the GURU is the tree. சைவ சித்தாந்தத்தில் சிவ பெருமானை குரு தட்சிணாமூர்த்தியாக வழிபடுகிறார்கள். இந்த குரு மரத்திலிருந்து வெளிப்படுவது போலவே காட்சிபடுத்தி இருப்பார்கள். இந்த கல் ஆல மரத்தின் காலடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் அந்த குருவுடன் ஒரு சொல் கூட பேசாமல் ஞானம் பெற்றதாக சைவத்தில் விபரங்கள் தெரிவிக்கின்றன. இது மரங்களின் அதுவும் குறிப்பாக கல் ஆல மரத்தின் ( கல்லின் மீது எந்த தண்ணீரும் ...

Re-treeing Hill of Malamanjanur Tiruvannamalai மரம் மறு முயற்சி மலைமஞ்சனூர்

Image
  எ ங்களுக்கு தொடர்ந்து சவால் கொடுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் மலைமஞ்சனூரில் இளம் காலையிலே மேகமெனும் மஞ்சையும் ஊடுருவி மலை முழுவதும் புல்லான மஞ்சம் புற்களின் மீதே நறுமணம் வீச எங்களது பசுமை மலைமஞ்சனூர் பொறுப்புள்ள இளைஞர்களுடன் விக்கிரமாதித்தனும் வேதாளம் கதையை போல் இந்த வருடமும் மலை மீது மரம் வைக்க 6.11.2022 சென்றோம். In the early morning dusky Sunday morning walked through the clouds to the aromatic land (aroma of the grass - Manjam Pil ) of Malamanjanur in Tiruvannamalai District in Tamizh Nadu. we have been doing these repeated exercises of planting trees on this hill with our Pasumai Malamanjanur Responsible Youth Club on 6.11.2022. போ ன வருடம் ஓடைகள் ஓடி வரும் பாதையில் மரக் கன்றுகளை நட்டோம். ஆனால் வழக்கம் போல் சிலர் நெருப்பு மூட்டி மகிழ்ந்ததால் நாங்கள் வைத்த மரங்கள் தீக்கிரையாகின. அதனால் இந்த முறை உச்சி மலைக்கு சென்று 6 அடி வளர்ந்த பூவரசு கன்றுகளை நட்டோம். Last year we planted the trees on the path of the rivulets flowing down the hill. But early this year some miscreants ligh...

Hill Fires complaint and Response from Director Environment

Image
  மலைகளுக்கு தீ பற்றிய புகாரும்  சுற்று சூழல்  இயக்குனரின் பதிலும்  Responsible Citizens iYakkam submitted our petition to draw the attention of the Environment Secretary & Director -Environment & Climate change  & has received response from the Director. They have also forwarded it to DFOs of Namakkal Division, Salem Division, Dharampuri Division, Tiruvannamalai South Division & Krishna Giri Division. கடந்த சில  மாதங்களுக்கு முன் தமிழகத்தில் கிழக்கு  தொடர்ச்சி மலைகளில் பல குன்றுகளிலும் மனிதர்களால் செயற்கையாக மூட்டப்பட்ட தீ குறித்த பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக அளித்த மனுவிற்கு சுற்றுப்புற சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இயக்குனரிடமிருந்து பதில் வந்துள்ளது.  அவரின் கடிதத்தை நாமக்கல் , சேலம் ,தருமபுரி , திருவண்ணாமலை தெற்கு , மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர்களுக்கு நமது புகாரை மேல் நடவடிக்கை எடுக்க அனுப்பியுள்ளார்கள். பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் மனுவின் சாராம்சம் Responsible Citizens iYakkam Petitions' su...

Save Trees on the Hill

Image
  மலையின் பசுமையை மீட்போம் கடந்த மூன்று வருடங்களாக பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உள்ள மலைமஞ்சனூர் மலையில் விஜய் ரசிகர் மன்றம், சிவனடியார்கள், ஆர் எஸ்  எஸ் ஸின் பசுமை படை என்று பல குழுவினருடனும் இணைந்து விதை பந்துகள் தூவுதல், போத்து மரங்கள் நடுதல், மரக் கன்றுகள் நடுதல் என்று பல பசுமை நடவடிக்கைகளை செய்து வந்துள்ளோம். ஆனால் ஒவ்வொரு வருடமும்  யாரோ ஒருவர் பொறுப்பில்லாமல் போடும் ஒரு பத்த வைத்த தீக்குச்சிக்கு அனைத்து மரங்களையும் இழந்து வருகிறோம். In the last 3 years , Responsible Citizens iYakkam have taken up the cause of greening the Malamanjanur hill in Thandrampet Block in Tiruvannamalai District by sowing seed balls, planting pothu trees and tree saplings with the Help of Actor Vijay's fan club, Lord Siva Devotees & RSS environmental wing.  But every year one irresponsible person's act of throwing a lighted match stick has burnt down all our efforts.  யார் பத்த வைக்கிறார்கள் ? என்ற கேள்விக்கு கிராமத்தினர் யாரும்...

Happy Responsible Deepavali

Image
  Trees are not just for bringing the Rain or giving shade. Trees are the real Gurus and enlighteners of all beings and awakens the inner consciousness . Increase in tree density increases righteousness in the Land.  மரங்கள் மழைக்காகவும், நிழலுக்காக மட்டும் அல்ல. மரங்களே நாம் ஒவ்வொருவருக்கும் நமது உள்ளொளியை தூண்டி விடும் ஒரு சிறந்த குரு, ஆசான். தருவோங்க தருமம் ஒங்கும்.  Hills represents the Earth element , Lava brewing inside the hill represents fire element, Trees on the hills brings the movement of air representing the Air element , flowing river represents water element and everything else around it is the ether element. " Trees on Every Hill " project is not just for river rejuvenation, it is the connection between the all the five elements.  Trees are the standing example of expansion needed for the inner soul and ensures the love is spread far and wide among all beings.  மலைகள் நிலத் தன்மை உணர்த்துவதாகும். மலைகளில் உள்ளே இருக்கும் எரிமலை குழம்பு நெருப்பு த...

Parvatha Malai Trees IKiGAi

Image
பர்வதமலையில் மரங்களின்  இக்கிகய்  நெகிழ்வுகள் 23 OCT 2021   Parvathamalai Trees Planting IKiGAi moments   Our friends from Tamil Nadu & Andhra Pradesh were interested in joining RCi Tree expedition trip atop Parvatha Malai in Tiruvannamalai District. This year we chose to go through regular pilgrims route from Thenmaathi Mangalam village. பர்வதமலையில் " மரங்களின் தரிசனம் " காண பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் பயணத்தில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து வந்திருந்த நண்பர்கள் இணைந்தனர். இந்த வருடம் பக்தர்கள் அதிகமாக பயன்படுத்தும் தென்மாதி மங்கலம் வழியாக பயணப்பட்டோம். Parvathamalai Temple built by ardent devotees on top of a huge monolithic boulder above the hill terrains of Eastern Ghats. They have taken enormous efforts to take so many construction materials through a risky slippery path on the rocks just holding the crow bars pinned on the rocks. பர்வதமலையின் உச்சியில் உள்ள நெட்டு குத்தான பாறையில் வழுக்கும் மிக கடினமான வெறும் பாறைகளில் குத்தப்பட்டுள்ள கடப்பாறை...