Posts

Showing posts with the label பேரிடர்

சென்னை வெள்ளம் சொல்லும் பாடம் நகர் விட்டு நகர்

Image
  மீண்டும் சென்னையில் வெள்ளம் மீளுமா  நகரம் ??? 2015 பிறகு மீண்டும்  அதே டிசம்பர் 4, ஆனால் வருடம் மட்டும் 2023.  நகரெங்கும் வெள்ளம் , வீடுகளுக்குள் தண்ணீர் , மக்கள் அவதி, பொருட்கள் சேதாரங்கள் , பாதித்த  வாழ்வாதாரங்கள், சலிப்புடன் மீண்டும்  தொடரும்  நெருக்கடி மிகு நகர வாழ்க்கை. மூன்று மாதத்தில் பெய்ய  வேண்டிய  மழை மூன்று நாட்களுக்குள் பெய்கிறது. புதிய தலைமுறை தொ.கா. காணொளி லிங்க்  https://youtu.be/SU8ACs-pfBU?si=QX24D28a_K24ofLj நம்மாழ்வார் அய்யா  அன்றே  சொன்னார். " இனி   புயல் மழை  தான் பருவ மழை கிடையாது " என்று.  புயல் மழையை தவிர்ப்பது எப்படி ?? தமிழரின் வாழ்வியல் முறைப்படி வந்த சொலவடை " மாதம்  மும்மாரி மழை ". ஆனால் இன்று  மாதம்  மும்மாரி பெய்கிறதா ??? இல்லை . ஏன் பெய்வதில்லை ??  பருவமழை பெய்ய  அடிப்படை தேவை நாட்டில்  உள்ள மலைகள்  அனைத்திலும் அடர்ந்த மரங்கள் மூடிய புற்களை கொண்ட  அடர்வனம்.  ஒவ்வொரு மரமும் தனது இலைகளில் பல இலட்சம்  லிட்டர்  தண்ணீராய் சேமிக்...

ஆறா தேனீரா

Image
  ஒரு எளிமையான செய்கை மழை பொழிவை அதிகரிக்கும். தேனீர் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆனால் அதுவே அடிப்படை தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா ??? ஆங்கிலேயர் இந்தியாவிற்கு  வருவதற்கு முன்னால் உலகத்தில் இன்று அதிக மழை பெய்யும் இடமாக சொல்லப்படும் சிரபுஞ்சியை காட்டிலும் நமது நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வந்தது. ஆனால் இன்று நீலகிரியின் அடிவாரத்தில் இருக்கும் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது போலத்தான் டார்ஜீலிங்கிலும் மற்ற அசோமின் தேயிலை தோட்டங்களிலும்.  சமீபத்தில் இலங்கையில் உணவு பற்றாக்குறை என்ற செய்திகள் வருகின்றன.  சிலோன் தேயிலை மிக பிரசித்தி பெற்றது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் மலைகளில் பல ஆண்டுகளாக தேயிலை தோட்டங்கள் செயல்படுவதால் மழை பொழிவு குறைந்து,  விவசாயம் குறைந்து,  உணவு பொருள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தின் அடிப்படையான தேயிலை வியாபாரத்தை குலைக்க தெற்காசியாவில் ஆங்கிலேயர் தெற்காசியாவில் பல இடங்களில் தேயிலையை அறிமுகப்படுத்தினார்கள்.  ஜப்பானின் தேயி...