சென்னை வெள்ளம் சொல்லும் பாடம் நகர் விட்டு நகர்
மீண்டும் சென்னையில் வெள்ளம் மீளுமா நகரம் ??? 2015 பிறகு மீண்டும் அதே டிசம்பர் 4, ஆனால் வருடம் மட்டும் 2023. நகரெங்கும் வெள்ளம் , வீடுகளுக்குள் தண்ணீர் , மக்கள் அவதி, பொருட்கள் சேதாரங்கள் , பாதித்த வாழ்வாதாரங்கள், சலிப்புடன் மீண்டும் தொடரும் நெருக்கடி மிகு நகர வாழ்க்கை. மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாட்களுக்குள் பெய்கிறது. புதிய தலைமுறை தொ.கா. காணொளி லிங்க் https://youtu.be/SU8ACs-pfBU?si=QX24D28a_K24ofLj நம்மாழ்வார் அய்யா அன்றே சொன்னார். " இனி புயல் மழை தான் பருவ மழை கிடையாது " என்று. புயல் மழையை தவிர்ப்பது எப்படி ?? தமிழரின் வாழ்வியல் முறைப்படி வந்த சொலவடை " மாதம் மும்மாரி மழை ". ஆனால் இன்று மாதம் மும்மாரி பெய்கிறதா ??? இல்லை . ஏன் பெய்வதில்லை ?? பருவமழை பெய்ய அடிப்படை தேவை நாட்டில் உள்ள மலைகள் அனைத்திலும் அடர்ந்த மரங்கள் மூடிய புற்களை கொண்ட அடர்வனம். ஒவ்வொரு மரமும் தனது இலைகளில் பல இலட்சம் லிட்டர் தண்ணீராய் சேமிக்...