Posts

Showing posts with the label nammazhwar

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

Image
 நம்மாழ்வாரை தேடி-  பயணம் -2 நம்மாழ்வார் தெரு பெயர் பலகை இட்டு 5 வருடங்கள் நிறைவும் நம்மாழ்வார் அய்யாவின் 87 ம் பிறந்த நாளை கொண்டாடு விதமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாச்சார் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இணைந்து கொண்டாடினோம். கடும் வெயில் நேரத்திலும் "இயற்கை திரும்பும் பாதை"யின் அவசியத்தை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ண குமார், இந்த கடும் வெயிலே நம்மாழ்வார் விட்டு சென்றுள்ள இயற்கை மீட்பு பணியை இன்னும் வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் விளக்கினார். இந்த கிராமத்தின் முன்னோடி இயற்கை வழி விவசாயி திரு தசரதனின் பிள்ளைகள் செல்வன். யோகேஷ், செல்வி வேணி, செல்வி புவி ஆகியோர் நம்மாழ்வார் பற்றிய தங்களின் புரிதலை மழலை மொழியில் வெளிப்படுத்தினர். தங்கள் தலைமுறையிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் என்று உறுதி மொழி அளித்தனர், நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் போது தான் திரு தசரதனின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் கிடைத்தது . இது வரை வெறும் ஜாதக குறிப்பாக தமிழ் மாதமும் பிறந்த நட்ச...

Nammazhwar Street In Thiruvannamalai நம்மாழ்வார் தெரு திருவண்ணாமலை

Image
நம்மாழ்வார் தெரு துவக்கம் இயற்கைக்கு திரும்பும் பாதை. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ் கிராமம். ஆறுகள் ஓட மிக செழிப்பாக விவசாயம் செய்த கிராமம். ஆனால் படிப்படியாக இன்று விவசாயம் குறைந்து விவசாயம் என்பது ஒரு நட்டமடைய செய்யும் தொழில் என்ற நிலையில் கிராமத்தின் பாதி மக்கள் தொகை நகரங்களில் வாழ்வாதாரத்தை தேடி சென்றுவிட்டது.   இதே நிலை தொடர்ந்தால் மீதமுள்ளவர்களும் நகரங்களில் நச்சுபுகையில் நெருக்கடி சந்துகளில் வாழ போக வேண்டிய சூழல்.   இது இன்று இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பான்மையான கிராமங்களில் உள்ள யதார்த்த நிலை.  இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் படுகையில் இருக்கும் மேல்பாச்சார் கிராமம் விதிவிலக்கல்ல.   விவசாயிகளின் வாழ்க்கை தொடர் போராட்டமாகவே விதைகள், உரங்கள்,   பூச்சிக் கொல்லிகள் களைக் கொல்லிகள், டிராக்டர்களின் உழவுக் கூலி, நோய்களுக்கான செலவு என்று வரவைக் காட்டிலும் செலவே அதிகம் செய்ய வேண்டிய சூழல்.   கிராமத்தின் பொருளாதாரம் நகரத்தை சார்ந்தே இருக்கும் நிலை. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு வியாபாரிகள...