Van Ki baat வன் கீ பாத் AIR Tamil FM Interview on 5 Jul 2023 மரத்தின் குரல் வானொலியில்
Van ki baat மரத்தின் குரல் அனைத்து இந்திய வானொலியின் விவித பாரதியின் 102.3 பண்பலையில் " வன மஹோத்ஸவ் " வார கொண்டாடத்தில் "வனங்களை வளர்ப்பதில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் பங்களிப்பை பற்றி பேச நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர் திருமதி. செண்பக காசி அழைத்திருந்தார். 5.7.2023ல் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நமது மரங்களுடனான அனுபவத்தை மிக சுவாரசியமான உரையாடலாக வழங்கினார். எங்களது உரையாடல் " அடையாறுக்கும் கூவாறுக்கும் இடையில் இருக்கும் ஏ ஐ ஆறில் " (AIR -All India Radio ) ஆரம்பித்து உலகத்தின் அனைத்து ஆறுகளை பற்றியும், அவை உற்பத்தியாகும் மலைகள் பற்றியும் , நதிகள் வழங்கும் வளங்களினால் நாகரீகங்களின் வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சியை இவை அனைத்தும் " வனங்களின் கொடை " என்பதை பற்றி விளக்கினோம். வனங்களின் கொடை மழை மழைகளின் ஓட்டம் ஓடை ஓடைகளின் சங்கமம் நதி நதிக்கரையில் பிறப்பது நாகரீகம் நாகரீகத்தின் வெளிப்பாடு கலைகள் அதனாலேயே நாங்கள் வனம் வளர்க்கும் கலை கற்கிறோம் மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தின் விபரங்கள், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வரை வனங்களை உருவாக்க கூடிய எளி...