Posts

Showing posts with the label melpachar

திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது

Image
  திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது  கடந்த ஜூன் 2021 ல் நமது பொறுப்புள்ள குடிமக்கள்  இயக்கத்தின் இணையதளத்தில் நாம்  மேல்பாச்சார் - மோதக்கல் சாலையில்  உள்ள பெருமாள் அப்பன்  கோவில் மலையில் மர கன்றுகள் நட போவதை பற்றிய  திட்டத்தை  https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html இந்த பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இதனை  நனவுபடுத்த நமது  இயக்கத்தின் சார்பாக நேரிலும்  தபால் மூலமாகவும் அலைபேசி  வாயிலாகவும் பல  முறை  உதவி திட்ட  இயக்குனர் (ஊரக  வளர்ச்சி )   திரு. லட்சுமி நரசிம்மன்   , ஊரக வளர்ச்சி அலுவலர்கள் திரு. . அமிர்த ராஜ்   ஆகியோரை  சந்தித்து இந்த மலையில் அடர்த்தியாக மரங்கள் நட்டு மலையை பராமரிக்க வேண்டியதன்  அவசியத்தை மேல்பாச்சார் கிராம ஊராட்சி நிர்வாகத்தின்  வாயிலாகவும் முயற்சித்தோம். இதற்கு நடுவில் இந்த  பகுதியில்  தொழிற் பேட்டை துவங்குவதற்கு நிலங்கள் கையகப்படுத்த போவதாக தகவல்கள் ...

Hill Tree Rain Tiruvannamalai மலை மரம் மழை திருவண்ணாமலை

Image
Tree Planting Preparations for the Monsoon   மழைகாலத்தில் மரங்கள் நட தயாரான நிகழ்ச்சி F or the forthcoming North East Monsoon in Tamilnadu between September to December 2021, Responsible Citizens iYakkam (RCi)  in consultation with Rural Development & Panchayati Raj Department (RDPRD ) identified the hills for tree plantations at Melpachar & Malamanjanur Villages in Tiruvannamalai District. வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழைக் காலமான செப்டம்பர் முதல் டிசம்பர் 2021 வரையிலான மாதங்களில் மேல்பாச்சார் மற்றும் மலைமஞ்சனூர் கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆலோசனைப்படி மலைகளில் மரக் கன்றுகள் நடும் இடங்களை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் அந்த கிராமங்களின் இளைஞர்கள் குழுக்களுடன் இணைந்து தெரிவு செய்தது. O n the occasion of World Environment Day, Block Development Officer (BDO) Mr. Amirta Raj visited Melpachar on 5th June 2021.  இதன் பொருட்டு உலக சுற்றுபுற சூழல் தினமான 5 ஜூன் 2021 அன்று தண்ட் ராம்பட்ட வட்ட வளர்ச்சி அலுவலர் திரு அமிர்த ராஜ் அய்யா அவர்கள் ம...

Youth efforts Nature pours

Image
  இளைஞர்களின் முயற்சி  இயற்கையின் நெகிழ்ச்சி Youth efforts Nature pours ஜனவரி மாதத்தில் அடை மழை ஊரெல்லாம் வெள்ளம் ஓடைகளில் ஆற்று நீர் ஒடி ஏரி குளமெல்லாம் நிரம்பின. தமிழ்நாட்டில் பொதுவாக ஜனவரி மாதத்தில் ( மார்கழியில் ) மழை பெய்வதில்லை. ஆனால் இந்த வருடம் 2021 இது வரை இல்லாத சரித்திரமாக தொடர்ந்து மூன்று நாட்கள் நிற்காத மழை. வறன்ட திருவண்ணாமலை மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் மழை.  https://youtu.be/iDlYrqCkTGc In the 1st week of January 2021, Tiruvannamalai witnessed unprecedented rain. Generally in January it does not rain over these places. Every area was filled with water. மேற்கிலிருந்து பாய்ந்த ஆறு என்ற சொல் மருவி மேல்பாச்சார் என்ற கிராமத்தில் கடந்த ஆறு வருடங்களாக வறட்சியாகவே இருந்த கிராமம் ஜனவரியில் ஊரெங்கும் தண்ணீர் திருவிழா ஆனது.  For the last six years of drought has finally come to an end in the corner most village , Melpachar, the name means the river which flown from the west. நாம் நமது நிகழ்வில் ஏற்கனவே பதிவிட்டபடி  https://responsible-citizens-iyakka...

Nammazhwar Street In Thiruvannamalai நம்மாழ்வார் தெரு திருவண்ணாமலை

Image
நம்மாழ்வார் தெரு துவக்கம் இயற்கைக்கு திரும்பும் பாதை. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ் கிராமம். ஆறுகள் ஓட மிக செழிப்பாக விவசாயம் செய்த கிராமம். ஆனால் படிப்படியாக இன்று விவசாயம் குறைந்து விவசாயம் என்பது ஒரு நட்டமடைய செய்யும் தொழில் என்ற நிலையில் கிராமத்தின் பாதி மக்கள் தொகை நகரங்களில் வாழ்வாதாரத்தை தேடி சென்றுவிட்டது.   இதே நிலை தொடர்ந்தால் மீதமுள்ளவர்களும் நகரங்களில் நச்சுபுகையில் நெருக்கடி சந்துகளில் வாழ போக வேண்டிய சூழல்.   இது இன்று இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பான்மையான கிராமங்களில் உள்ள யதார்த்த நிலை.  இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் படுகையில் இருக்கும் மேல்பாச்சார் கிராமம் விதிவிலக்கல்ல.   விவசாயிகளின் வாழ்க்கை தொடர் போராட்டமாகவே விதைகள், உரங்கள்,   பூச்சிக் கொல்லிகள் களைக் கொல்லிகள், டிராக்டர்களின் உழவுக் கூலி, நோய்களுக்கான செலவு என்று வரவைக் காட்டிலும் செலவே அதிகம் செய்ய வேண்டிய சூழல்.   கிராமத்தின் பொருளாதாரம் நகரத்தை சார்ந்தே இருக்கும் நிலை. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு வியாபாரிகள...