Posts

Showing posts with the label farming

Nammazhwar Street In Thiruvannamalai நம்மாழ்வார் தெரு திருவண்ணாமலை

Image
நம்மாழ்வார் தெரு துவக்கம் இயற்கைக்கு திரும்பும் பாதை. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ் கிராமம். ஆறுகள் ஓட மிக செழிப்பாக விவசாயம் செய்த கிராமம். ஆனால் படிப்படியாக இன்று விவசாயம் குறைந்து விவசாயம் என்பது ஒரு நட்டமடைய செய்யும் தொழில் என்ற நிலையில் கிராமத்தின் பாதி மக்கள் தொகை நகரங்களில் வாழ்வாதாரத்தை தேடி சென்றுவிட்டது.   இதே நிலை தொடர்ந்தால் மீதமுள்ளவர்களும் நகரங்களில் நச்சுபுகையில் நெருக்கடி சந்துகளில் வாழ போக வேண்டிய சூழல்.   இது இன்று இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பான்மையான கிராமங்களில் உள்ள யதார்த்த நிலை.  இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் படுகையில் இருக்கும் மேல்பாச்சார் கிராமம் விதிவிலக்கல்ல.   விவசாயிகளின் வாழ்க்கை தொடர் போராட்டமாகவே விதைகள், உரங்கள்,   பூச்சிக் கொல்லிகள் களைக் கொல்லிகள், டிராக்டர்களின் உழவுக் கூலி, நோய்களுக்கான செலவு என்று வரவைக் காட்டிலும் செலவே அதிகம் செய்ய வேண்டிய சூழல்.   கிராமத்தின் பொருளாதாரம் நகரத்தை சார்ந்தே இருக்கும் நிலை. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு வியாபாரிகள...