Green village பசுமை பாச்சார்
பசுமை பாச்சார் Green Village பொ றுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் கிராமங்கள் தோறும் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் என்று பயணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்பாச்சார் கிராமத்தில் 15 லிருந்து 29 வயதுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து " பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் " கடந்த டிசம்பர் மாதம் 24, 2020 லே நேரு யுவ கேந்திராவில் பதியப்பட்டது. இது கிராமத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்குமானது என்பதால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டிற்கு ஒரு மரம் வழங்க வேண்டும் என்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தில் முடிவெடுத்தது. அதனை இளைஞர்கள் சங்கம் மூலமாக வீடுகள் தோறும் வழங்கவும் முடிவு செய்யபட்டது. அதன் படி இதனை ஒரு விழாவாக கிராம நிர்வாக அலுவலர் திருமதி. காஞ்சனா, பிரம்ம குமாரிகள் இயக்கத்திலிருந்து பிரம்மா குமாரி கீதா அவர்களும், மேல்பாச்சார் ஊராட்சி மன்ற தலைவர் திரு துர்கா ராமன் மற்றும் ஊர்க் கவுண்டர் புரவலர் திரு. இராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வரவேற்...