No meat to feed everyone
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்..... மகாகவி பாரதியின் கூற்றின் படி " ஜகத்தினை அழித்திடுவோம் " என்று நாம் கிளம்பியிருந்தால் இன்று நாம் வாழ இந்த உலகமே இருந்திருக்காது. வருடா வருடம் பசியினால் இறக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை நாம் உணவில் கை வைக்கும் போது ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்துகிறது. வேறு எந்த நோயை காட்டிலும் பசியே அதிகம் நபர்களை கொல்கிறது. நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கி போக முடியுமா ? நாம் அனைவரும் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் பொறுப்புடன் உண்டோமானால் அனைவருக்கும் பூமி போதுமான உணவை அளிக்கிறது. உணவில்லாதவருக்கு உணவளிக்க யாராவது பண உதவி செய்ய வேண்டுமா ???? உணவு தானியங்கள், இறைச்சிகள் தானமாக அளிக்க வேண்டுமா ???? உணவு பற்றா குறையா ? சில விஞ்ஞானிகள் அனுமானிப்பது போல் வேற்று கிரகத்திற்கு குடி போக வேண்டுமா ??? வேறெந்த கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்ற ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டுமா ???? நிச்சயம் இவ்வளவு கடினமான பண விரயம் ஆக கூடிய வழிகள் தேவையில்லை. நமது சக மனிதர்கள் ம...