is yoga necessary ?
யோகா அவசியமா ??? க டந்த சில வருடங்களாக அனைத்து நாடுகளிலும் யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் எல்லோரும் யோகா என்று பலவிதங்களில் கை, கால்களை உடம்பின் பல அங்கங்களை வளைத்து பல விதமான படங்களை வெளியிடுகிறார்கள். இ தில் பலர் மனதில் எழும்பும் கேள்வி ? இதென்ன யோகா ? இது நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமா ?? என்பது தான். “ யோ கா” என்ற சொல்லே “இயற்கையோடு இணைந்து /இயைந்து இருத்தல் “ என்பதாகும். இ தில் ஆசனங்கள் என்ற நிலை மட்டும் பலருக்கும் அது கை கால்கள் அசைக்கும் ஒரு உடற்பயிற்சியாக தெரிகிறது. ம னிதன் என்ற சொல்லே “மனம்” என்ற சொல்லின் மூலத்தில் இருந்த வந்தது. நாம் எப்போதும் அடையாளபடுத்திக் கொள்ளும் உடல் , அதனை இயக்கும் உயிர், ஜீவன் என்கிற ஆன்மா என்ற மூன்றும் மனித இயக்கத்தில் இணைந்து இயங்குவது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடையாளம் ஆகும். இ தில் ஆன்மா என்ற மூலக் கூறிற்கு எந்த விதத்திலும் வெளியிலிருந்து ஆபத்து வராது. மனித உடலிற்கும் உள்ளிருந்து வரக் கூட...