Posts

Showing posts from July, 2023

Future is going to be green எதிர்காலம் மிக பசுமையாக இருக்கும்

Image
  Village G ovt school students make seed balls and eco bricks  கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள் செய்த விதை பந்துகளும் நெகிழி கற்களும் இந்தியாவில் எதிர்பார்க்கும் காடுகளின் நிலப்பரப்பின் அளவு  33% . இன்று 15-16% மட்டுமே வனங்கள் இருப்பதாக கூறப்படும் காலக்கட்டத்தில் பெரியவர்கள் அழிப்பதில் அதிக மும்முரம் காட்ட ஆனால் சிறுவர்கள் தங்கள் எதிர்காலம் மிகவும் பசுமையாக இருக்க வேண்டும் என்ற முயற்சியை சிறுவர்களுக்கே உரித்தான உற்சாகத்துடன்  செய்து நம்பிக்கை அளித்தனர்.  Forest cover in India is expected to be 33% of the land mass to fight climate change. Today when we are facing the grim situation of only 15 to 16% forest cover, elders are bent upon to remove the further cover which the young kids with their jubilant enthusiasm attempting to get the greenery back gives lots of hopes for the future. உற்சாகத்தின் ஊற்றுக் கண் சிறுவர்கள், அதிலும் கிராமத்து அரசு பள்ளிக் கூடத்தில் மடை திறந்த ஊக்கத்திற்கு நாமும் நமது கிராமத்தை பசுமையாக்க கிடைத்த வாய்ப்பை குழந்தைகளுக்கே உள்ள மகிழ்...

Van Ki baat வன் கீ பாத் AIR Tamil FM Interview on 5 Jul 2023 மரத்தின் குரல் வானொலியில்

Image
Van ki baat மரத்தின் குரல்   அனைத்து இந்திய வானொலியின் விவித பாரதியின் 102.3 பண்பலையில் " வன மஹோத்ஸவ் " வார கொண்டாடத்தில் "வனங்களை வளர்ப்பதில் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் பங்களிப்பை பற்றி பேச நிகழ்ச்சி ஓருங்கிணைப்பாளர் திருமதி. செண்பக காசி அழைத்திருந்தார். 5.7.2023ல் இரவு 7 மணி முதல் 9 மணி வரை நமது மரங்களுடனான அனுபவத்தை மிக சுவாரசியமான உரையாடலாக வழங்கினார்.  எங்களது உரையாடல் " அடையாறுக்கும் கூவாறுக்கும் இடையில் இருக்கும் ஏ ஐ ஆறில் " (AIR -All India Radio ) ஆரம்பித்து உலகத்தின் அனைத்து ஆறுகளை பற்றியும், அவை உற்பத்தியாகும் மலைகள் பற்றியும் , நதிகள் வழங்கும் வளங்களினால் நாகரீகங்களின் வளர்ச்சி, நகரங்களின் வளர்ச்சியை இவை அனைத்தும் " வனங்களின் கொடை " என்பதை பற்றி விளக்கினோம்.       வனங்களின் கொடை மழை மழைகளின் ஓட்டம் ஓடை ஓடைகளின் சங்கமம் நதி நதிக்கரையில் பிறப்பது நாகரீகம் நாகரீகத்தின் வெளிப்பாடு கலைகள் அதனாலேயே நாங்கள் வனம் வளர்க்கும் கலை கற்கிறோம் மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தின் விபரங்கள், ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற வரை வனங்களை உருவாக்க கூடிய எளி...

Tree on the Rock is the Guru கல் ஆலமரமே குரு

Image
  In the Saiva Siddhanta , Lord Siva is worshipped as the Guru Dakshina Murthy. The Guru is depicted as a Human face carved out of a Tree. This is to show the importance of the tree as a source of wisdom, as Trees are constantly in sync with universe and all the ancient sages did their penance under the trees to acquire the universal wisdom  available in abundance under the trees. In this picture below, four sages are seated near to their Guru on either side and the philosophy says that the four acquired their knowledge without even uttering a single word with the Guru, which eventually means the GURU is the tree. சைவ சித்தாந்தத்தில் சிவ பெருமானை குரு தட்சிணாமூர்த்தியாக வழிபடுகிறார்கள். இந்த குரு மரத்திலிருந்து வெளிப்படுவது போலவே காட்சிபடுத்தி இருப்பார்கள். இந்த கல் ஆல மரத்தின் காலடியில் அமர்ந்து சனகாதி முனிவர்கள் அந்த குருவுடன் ஒரு சொல் கூட பேசாமல் ஞானம் பெற்றதாக சைவத்தில் விபரங்கள் தெரிவிக்கின்றன. இது மரங்களின் அதுவும் குறிப்பாக கல் ஆல மரத்தின் ( கல்லின் மீது எந்த தண்ணீரும் ...