Posts

Showing posts from October, 2023

பழ மரங்கள் நடுதலே சிறந்த அன்னதானம் Fruit Trees Planting is the Real Annadhanam

Image
  Vallalar 200 th Year of appearance வள்ளலார் இறந்து விட்டாரா ??? இரத்தமும் சதையும் உள்ள பரு உடலை ஒளி உடலாக மாற்ற முடியும் என்ற விஞ்ஞானத்தை தான் வாழ்ந்து காட்டி வழிக் காட்டி கொண்டிருப்பவர் அருட்பிரகாச வள்ளலார்.  இது மாய வித்தையில்லை. விஞ்ஞானிகளாலும் ஓப்புக் கொள்ளப்பட்ட அறிவியல், ஒளியிலிருந்து தான் இந்த உலகமே உருவானது என்பது. அதனால் உருவம் எதில் இருந்து வந்ததோ மீண்டும் அதே ஓளியாக முடியும் என்பதே.  ஒளி உடம்பை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை மிகத் தெளிவாக வள்ளல் பெருமகனார் விளக்கியுள்ளார். ஒளி உடம்பை அடைய மிக எளிமையான வழியாக "ஜீவ காருண்ய ஒழுக்கம்" என்ற வாழ் நெறியில் வாழ்ந்து காட்டினார். அதன் வெளிப்பாடே "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பயிருக்கு தேவையான தண்ணீர், அதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.  தெய்வமணிமாலை என்ற அருட்பாடலில் சென்னையில் உள்ள கந்தகோட்டத்தில் உள்ள முருகனை போற்றி பாடியுள்ள பாடலில் "தரு ஓங்கு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே " என்ற பாடி "தருமமிகு சென்னை" என்றும் குறிப்பிடுகிறார். இதில் அவர் நாம் அனைவருக்கும...