விதை பந்து விதைத்தல் மலைமஞ்சனூர் 10 நவம்பர் 2019
மலைகள் தோறும் மரங்கள் திட்டம் விதை பந்து விதைத்தல் மலைமஞ்சனூர் 10 நவம்பர் 2019 திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் இருக்கும் மலைமஞ்சனூர் கிராமத்தில் உள்ள மலையில் உள்ளூர் கிராம மக்கள் உதவியுடன் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பில் 3500 விதை பந்துகள் மலை மீது தூவுவதல் மற்றும் மண் கண்டம் வாட்டம் இருக்கும் இடங்களில் நடப்பட்டது. தண்டராம்பட்டு வட்டத்திலேயே மரங்களே இன்றி அதிகம் பாறைகளுடன் வெறும் புற்களாகவே காட்ட்சியளிக்கும் ஒரு மலை. அதுவும் வருடாவருடம் இங்கும் வளரும் மஞ்சம் பில்லை பறிப்பதற்காக இந்த மலையில் தீ மூட்டி மலையில் இயற்கையாகவே வளரக்கூடிய மரங்களை கூட தீயினால் எரிந்து வாடிவிடுகின்றன. இதனாலேயே இந்த மலையை பசுமையாக்குவதே ஒரு சவாலாக ஏற்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் களமிறங்கியது. இதற்காக உள்ளூர் மக்கள் பலரை தொடர்பு கொண்டு மலையின் மீது மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியத்தை பலருக்கும் எடுத்துரைத்தோம். இதில் இளம் விவசாயி திரு. செல்வ குமார் மற்றும் அவரின் நண்பர்கள் அவர்கள் ஊரில் இருக்கும் இயற்கை கொடுத்த வரமான மலையை பயன்படுத...