தீ மலை மாவட்டத்தில் மலையில் தீ Fire on the Hills - Thiruvannamalai district
தீ மலை மாவட்டத்தில் மலையில் தீ வெயில் காலம் தொடங்க தொடங்கியதுமே மலைகளில் நெருப்பு மற்றும் புகை காண துவங்கிவிடும். இது ஏதோ வெயிலின் வெப்பத்தினால் காய்ந்த சருகுகள் எரிகின்றன என்று நினைத்தால் அது சரியல்ல. இது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் ( தீ.மலை) மாவட்டம் முழுவதுமே இயற்கை கொடுத்திருக்கும் கொடை மலைகளாகும். இது வரை எந்த மனித முயற்சியும் இல்லாமல் இயற்கையாகவே இருப்பது மலைகள் மட்டுமே. மனிதனால் குப்பைகளின் மலைகளை மட்டுமே உருவாக்க முடிந்துள்ளது. மனிதர்களால் மலைகளை அழிக்க முடிகிறது ஆனால் ஒரு மலையைக் கூட உருவாக்க முடியவில்லை. அதனால் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கிராம மக்கள் மலைகளை கொண்டாட வேண்டும். மலைகள் வெறும் பாறைகளால் ஆனதல்ல. அது ஒரு உயிரோட்டமுள்ள நம்மைப் போல் ஒரு உயர் உயிரினம். ஆனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மலைகள் மரங்களின்றி வெறும் பாறைகளாக சூரிய வெப்பத்தை எதிரொளித்து எங்கும் அக்னி பகவானது தீச்சுடர் உயிர்களையும் பயிர்களையும் வாட்டுகிறது. இந்த சூழ்நிலையிலும் வளரும் கொஞ்ச நஞ்ச மரங்களையும் தாவரங்...