தீ மலை மாவட்டத்தில் மலையில் தீ Fire on the Hills - Thiruvannamalai district
தீ மலை மாவட்டத்தில் மலையில் தீ
வெயில் காலம் தொடங்க தொடங்கியதுமே மலைகளில் நெருப்பு மற்றும்
புகை காண துவங்கிவிடும். இது ஏதோ வெயிலின் வெப்பத்தினால் காய்ந்த சருகுகள் எரிகின்றன
என்று நினைத்தால் அது சரியல்ல. இது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படுகிறது.
இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் ( தீ.மலை) மாவட்டம் முழுவதுமே
இயற்கை கொடுத்திருக்கும் கொடை மலைகளாகும்.
இது வரை எந்த மனித முயற்சியும் இல்லாமல் இயற்கையாகவே இருப்பது மலைகள் மட்டுமே.
மனிதனால் குப்பைகளின் மலைகளை மட்டுமே உருவாக்க முடிந்துள்ளது.
மனிதர்களால் மலைகளை அழிக்க முடிகிறது ஆனால் ஒரு மலையைக் கூட
உருவாக்க முடியவில்லை. அதனால் மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கிராம மக்கள்
மலைகளை கொண்டாட வேண்டும். மலைகள் வெறும் பாறைகளால் ஆனதல்ல. அது ஒரு உயிரோட்டமுள்ள நம்மைப்
போல் ஒரு உயர் உயிரினம்.
ஆனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மலைகள் மரங்களின்றி வெறும்
பாறைகளாக சூரிய வெப்பத்தை எதிரொளித்து எங்கும் அக்னி பகவானது தீச்சுடர் உயிர்களையும்
பயிர்களையும் வாட்டுகிறது. இந்த சூழ்நிலையிலும்
வளரும் கொஞ்ச நஞ்ச மரங்களையும் தாவரங்களையும் இயற்கையின் அருமை உணராத மனிதர்களால் வெறும்
ஒற்றை தீக்குச்சியின் நெருப்பில் கருகிவிடுகின்றன.
கடந்த வருடத்தில் தண்டராம்பட்டு தாலுக்காவில் உள்ள
பல மலைத் தொடர்களிலும் நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாகவும் மற்றும் சில
இயற்கை ஆர்வலர்களால் விதை பந்துகளும், மரக்கன்றுகளும் பல முறை நடப்பட்டது. ஆனால் அவையும் இந்த செயற்கையாக வைக்கப்படும் தீயினால்
பொசுங்கிவிடுகின்றன.
மலையில் தீ வைக்கப்பட்டு எரியும் காட்சி :
இது மலைகளின் அடிவாரத்தில் வசிக்கும் சில கிராமத்தவர்களின்
அறியாமையினால் சில ஆயிரம் ரூபாய் வருமானத்திற்காக இங்கு வாழும் மக்களின் உயிரினங்களின்
எதிர்காலமே பாழாகி வருகிறது.
எனவே இந்த நிலையை மாற்ற பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக
விழிப்புணர்ச்சி பேரணி / முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு ஆட்டோக்கள் மற்றும்
பைக்குகளில் மலைகளின் அடிவார கிராமங்களில் பிரச்சாரங்கள் மேற்கொள்ள போகிறோம்.
மேலும் இப்பொழுதிலிருந்தே ஒவ்வொரு கிராமங்களிலும் ஆல, அரச,
கல் அத்தி, வாத நாராயணன், பூவரசு, ஒதிய மரக் போத்துக் கன்றுகளை வளர்த்து அவற்றை மழைக்
காலங்களில் மலை குன்றுகளில் நட முயற்சி எடுத்து வருகிறோம்.
தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும்
இந்த பொது நலனுக்காக நமது வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவசரமாக
களம் காண வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
களம் காண எங்களை தொடர்பு கொள்ளுங்கள் :
99 62 66 78 19
மின்னஞ்சல் : rspctzni@gmail.com
எனவே நாம் “ மலைகள் தோறும் மரங்கள்” வளர்த்து மலைகளை குளிர்வித்து
மேகங்களை தரையிறக்கி நீர் ஓடைகளாக்கி தண்ணீர் மிகு கிராமங்கள் ஆக்கி தண்ணீரி மிகும்
வட்டம் , மாவட்டமாக்கி வளமோடு வாழவோம்.
மலைகளை காப்போம்
மரங்களை வளர்ப்போம்
மழையை பெறுவோம்




Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society