Village School Science Exhibition கிராமத்தில் ஒரு அறிவியல் கண்காட்சி
கிராமத்தில் ஒரு அறிவியல் கண்காட்சி ஒரு தகவல் சமீபத்தில் வியப்பில் ஆழ்த்தியது. மலை வாழ் மக்கள் அதிகம் வாழும் ஒரு கிராமத்தில் அறிவியல் கண்காட்சி நடக்கிறது. அதுவும் கடந்த ஒன்பது வருடங்களாக தொடர்ந்து நடை பெற்று வருகிறது. என்ன ? எங்கே ? எப்படி ? யார் பார்க்க வருவார்கள் என்று அடுக்கடுக்காக கேள்வி வந்தது. நேரில் சென்று தகவலை உறுதி செய்வோம் என்று திருவண்ணாமலை மாவட்டத்தின் கடைக்கோடியில் தர்மபுரி மாவட்டத்தின் எல்லை அருகே குபேர பட்டினத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு 9-3-2020 சென்றோம். 50 அறிவியல் தத்துவங்களை விளக்கும் எளிமையாய் சிறிய குழந்தைகளும் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் வரிசையாக காட்சிபடுத்தியிருந்தனர். ஒவ்வொரு தத்துவத்தையும் விளக்க ஒவ்வொரு மாணவர் ஓன்றாம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு மாணவர் வரை தயாராக இருந்தனர். “காற்றால் எடையை தூக்க முடியுமா ?” என்று வினவினாள் ஒரு மாணவி “முடியாது “ என்றவுடன் வாயால் ஒரு குழாயில் ஊதினாள், அந்த காற்று ஒரு அட்டையின் மீது இருக்கும் எடையை உயர்த்தியது. “அருமை” என்று பாராட்டிவிட்டு, “ இந்தத் தத்துவத்தை நிகழ்கால வாழக்கையில்...