Posts

Showing posts from May, 2020

Worship thy Nature இயற்கையை கொண்டாடுவோம்

Image
மலை மரம் மழை முருகன் ஓளியில் பிறந்தவனே ஒலியை ஓதியவனே ஆறாகி வா ஆராதிக்கவா https://www.pillaicenter.com/blog/muruga-warrior-of-victory/ ஆறுமுகம் கொண்டவனை மலை ஏறுமுகம் கண்டேன் குன்று தோறும் தளிர் மரமாய் நின்றிருக்கும் அழகா பாது குகை மலேசியா Batu Caves Malaysia பாலையில் ஆவியாகி பால்வெளியில் மேகமாகி குன்றின் உச்சியில் மரமாகி குளிர்வித்த குமரா குறிஞ்சியில் ஒடையாகி மருதத்தில் ஆறாகி முல்லையில் பயிராகி நெய்தலில் ஏரியாகி பன்முகம் காட்டும் கந்தா shanmuga river dam ஷண்முக நதி அணை  திருமலையிலும் உன் வாசம் திருவண்ணாமலையும் உன் திருப்புகழ் பேசும் அருணையே உன் உருவம் கருணையே நின் வடிவம் அரக்க குணம் கொண்டவனும் மரமாகி நின்றதால் இரக்க குணம் கொண்டு ஆட்கொண்ட பரம்பொருளே குன்றெங்கும் குடிக்கொண்டாய் குறத்தியையே மணங்கண்டாய் குன்றை தொழுதவனேயே குணமாக்குகின்றாய் ஆரை தொழுவதென்று அறியாமல் அலைகின்றோம் ஆறையே தொழ ஆறுமுகம் ஆனாயோ குறத்தி கரம் பற்ற ஆனையான உன் அண்ணன் அண்ணன் மலையிலும் அடைபட்ட காவிரியை க...

Nammazhwar Street In Thiruvannamalai நம்மாழ்வார் தெரு திருவண்ணாமலை

Image
நம்மாழ்வார் தெரு துவக்கம் இயற்கைக்கு திரும்பும் பாதை. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ் கிராமம். ஆறுகள் ஓட மிக செழிப்பாக விவசாயம் செய்த கிராமம். ஆனால் படிப்படியாக இன்று விவசாயம் குறைந்து விவசாயம் என்பது ஒரு நட்டமடைய செய்யும் தொழில் என்ற நிலையில் கிராமத்தின் பாதி மக்கள் தொகை நகரங்களில் வாழ்வாதாரத்தை தேடி சென்றுவிட்டது.   இதே நிலை தொடர்ந்தால் மீதமுள்ளவர்களும் நகரங்களில் நச்சுபுகையில் நெருக்கடி சந்துகளில் வாழ போக வேண்டிய சூழல்.   இது இன்று இந்தியாவில் தமிழகத்தில் பெரும்பான்மையான கிராமங்களில் உள்ள யதார்த்த நிலை.  இதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தின் தென் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் படுகையில் இருக்கும் மேல்பாச்சார் கிராமம் விதிவிலக்கல்ல.   விவசாயிகளின் வாழ்க்கை தொடர் போராட்டமாகவே விதைகள், உரங்கள்,   பூச்சிக் கொல்லிகள் களைக் கொல்லிகள், டிராக்டர்களின் உழவுக் கூலி, நோய்களுக்கான செலவு என்று வரவைக் காட்டிலும் செலவே அதிகம் செய்ய வேண்டிய சூழல்.   கிராமத்தின் பொருளாதாரம் நகரத்தை சார்ந்தே இருக்கும் நிலை. விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு வியாபாரிகள...