Corona Lessons TO mankind
கரோனா கற்று தந்த பாடம் கரோனா என்பது ஒரு சாதாரண கிருமி தானே என்ற மனிதரின் அலட்சியத்தை இயற்கை ஒரு சின்ன உயிரி கொண்டு தனது பேராற்ற்லை வெளிப்படுத்தியுள்ளது. “ இயற்கைக்கு திரும்பும் பாதை ” என்று மனித இனத்தை இயற்கை நோக்கி திருப்ப வேளாண் விஞ்ஞானிகள் நம்மாழ்வார் அய்யா, ஜப்பானிய மசானபு அய்யா மற்றும் வள்ளலார், வேதாத்ரி மகரிஷி போன்ற மெய்ஞானியர் கொடுத்த அறைகூவலுக்கு செவிமடுத்து இயற்கை என்னும் பேராற்றல் மிகச் சிறிய உருவங்கொண்டு யானையையே அடக்கிவிட்ட இறுமாப்புடன் சுற்றி வந்த மனித இனத்தை வீட்டை விட்டே வெளி வராமல் முடக்கி, இறந்த உறவினரை காணக் கூட முடியாமல் மனிதன் வந்த சுவடே தெரியாமல் அழிக்க தொடங்கியுள்ளது. ஒரு கிருமி மனிதனை முடக்கியவுடன் இது வரை மாசு மண்டி போயிருந்த பூமி இன்று தூசு இல்லாத காற்று, சுத்தமான நீர் , விலங்கில்லாத விலங்கினங்கள் என்று அனைத்தும் மனிதனிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. அதனால் மனித இனம் இதில் கற்றுக் கொண்ட பாடங்களை இயற்கைக்கு மதிப்பளித்து மீண்டும் வாழ இயற்கை கொடுத்த வரமாக ஏற்று தரமோடு வாழ்வோம். முதல் பாடம் - கிராமங்களுக்கு திரும்புவோம் இர...