திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது
திருவண்ணாமலையில் மலையை மீட்டு பழ மர கன்றுகள் நடப்பட்டது கடந்த ஜூன் 2021 ல் நமது பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் இணையதளத்தில் நாம் மேல்பாச்சார் - மோதக்கல் சாலையில் உள்ள பெருமாள் அப்பன் கோவில் மலையில் மர கன்றுகள் நட போவதை பற்றிய திட்டத்தை https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2021/06/hill-tree-rain-tiruvannamalai.html இந்த பதிவில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இதனை நனவுபடுத்த நமது இயக்கத்தின் சார்பாக நேரிலும் தபால் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் பல முறை உதவி திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி ) திரு. லட்சுமி நரசிம்மன் , ஊரக வளர்ச்சி அலுவலர்கள் திரு. . அமிர்த ராஜ் ஆகியோரை சந்தித்து இந்த மலையில் அடர்த்தியாக மரங்கள் நட்டு மலையை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை மேல்பாச்சார் கிராம ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாகவும் முயற்சித்தோம். இதற்கு நடுவில் இந்த பகுதியில் தொழிற் பேட்டை துவங்குவதற்கு நிலங்கள் கையகப்படுத்த போவதாக தகவல்கள் ...