Pongal Resolution Revolution
பொங்கல் உறுதி மொழி மாற்றத்தை தேடி
இந்த தை பொங்கல் முதல் ஒவ்வொரு விவசாயியும் ஒரு உறுதி மொழி ஏற்க வேண்டும்.
- கரும்பை வெல்லமாக மட்டுமே மாற்றி விற்பேன் என்று. கரும்பில் இருக்கும் அனைத்து சத்துக்களையும் நீக்கி வெள்ளை சக்கரை ஆக்க விவசாயி துணை போகக் கூடாது. தன்னால் நாலு பேரின் ஆரோக்கியம் கெடக் கூடாது என்ற பொறுப்பு விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். விவசாயி சமுதாயத்தின் மீது பொறுப்பான பங்களிப்பை தந்தால் தான் சமுதாயமும் விவசாயியின் நலனில் அக்கறை கொள்ளும். தன்னால் எந்த அளவிற்கு வெல்லமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே விவசாயி கரும்பு சாகுபடி செய்ய வேண்டும். சக்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்து செய்து விவசாயிகளை சாகும்படி நேர்ந்தது தான் யதார்த்தம்.
- பாரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே பயிரிடுவேன் என்று விவசாயி சபதம் எடுக்க வேண்டும். அதுவும் அந்த நெல் ரகங்களை தாங்களே பாலிஷ் செய்யாத பழுத்த நிறங்களில் மட்டுமே நேரடியாக விற்போம் என்று உறுதி ஏற்க வேண்டும்.
- பாரம்பரிய நாட்டு ரக மாட்டு ரகங்களை வளர்ப்போம் என்றும் வருமானம் என்கிற போர்வையில் பால் நிறுவனங்களுக்காக சீமை பசுக்களை வளர்த்து தீவனச் செலவுக்கே முக்கால்வாசி வருமானம் இழக்கும் நிலையிலிருந்து வெளியில் வர வேண்டும்.
- பாலையும் மதிப்பு கூட்டப் பட்ட பொருளாக தயிர், வெண்னை, நெய், பஞ்சகவ்யா போன்ற வடிவத்தில் மட்டுமே விற்க வேண்டும்.
- விவசாயிகள் தரமான உணவு வகைகளை இயற்கை வழி விவசாய முறையில் உற்பத்தி செய்து தானும் தனது குடும்பமும் மிகவும் செழிப்பான ஆரோக்கியத்துடன் ஆனந்தமாக வாழ பழக வேண்டும். விவசாய வாழ்க்கையின் ஆரோக்கியத்தையும் ஆனந்தத்தையும் பார்த்து நகரத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள் கிராமத்தை தேடி வந்து விவசாயியிடம் முன் பணம் கொடுத்து பொருட்கள் வாங்கி செல்லும் தன்னிறைவு சூழ்நிலையை உழவர்கள் உருவாக்க வேண்டும்.
- விவசாயிகள் தண்ணீரிலும் நீர் மேலாண்மையை கடைபிடித்து - வெள்ள விவசாயம் செய்யாமல் நெல் , கரும்பிற்கு கூட சொட்டு பாசனம் செய்து பொறுப்புடன் அறுவடை செய்ய வேண்டும்
இது நாள் வரை பலரையும் கொல்லும் விஷம் கலந்த விவசாயம் செய்து விவசாயிகள் கண்டதெல்லாம் கடன், ஏழ்மை , தற்கொலையே ஆகும். பிற உயிர்களுக்கு ஏற்படும் தொல்லைகளை விவசாயிகள் உணராத வரை இந்த சமுதாயமும் விவசாயிகளின் வலிகளை உணர போவதில்லை.
விவசாயிகளின் வாழ்க்கையில் வளம் மிக, விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டிய நேரமிது. அரசாங்கத்திடம் எப்பொதும் கையேந்த வேண்டிய நிலை இருப்பது நாட்டிற்கே அவமானம் என்பதை உணர வேண்டும். உழவர்கள் தங்கள் வாழ்க்கை நிலையை தங்கள் தொழிலை நேசிக்கக் கூடிய மதிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். அதற்கு தங்கள் பொருட்களுக்களை மதிப்புக் கூட்ட அதிகம் நேரம் செலவழிக்க வேண்டும் அவற்றை தங்கள் நிலத்திற்கே வாடிக்கையாளர்களை வரவழைக்க தொழில் நுடபங்களையும் கற்க வேண்டும்.
இதுவே உண்மையான தற்சார்பு பொருளாதாரம், உண்மையான பொருளாதர விடுதலை. விவசாயித்திற்கு அடிப்படை தேவையான மழை நீர் உற்பத்தியையும் விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டும்.
மலைகள் தோறும் மரங்கள் நட்டு மேகத்திற்கு அணைக்கட்டுவோம். இயற்கை வழி விவசாயம் மேற்கொண்டு தலை நிமிர்ந்து "பொங்கலோ பொங்கலோ" என்று உரக்க கூவி அழைப்போம்.
Very crucial resolutions that we should take. It's the call of the hour. Being a farmer, you are very courageous to suggest these changes.
ReplyDeleteFor betterment of society, farmers needs to be front runners as always
Deleteநல்ல செய்தி, சரியான நபர்களை சென்றடையும் என்று நம்புவோம்.
ReplyDeleteRight message, hope it reaches the right people
When a good thought enters farmers minds, it will naturally percolate to the public through food
Delete