is yoga necessary ?
யோகா அவசியமா ???
கடந்த சில வருடங்களாக அனைத்து நாடுகளிலும் யோகா தினம் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டுகிறது. திரும்பிய பக்கமெல்லாம் எல்லோரும் யோகா என்று பலவிதங்களில் கை, கால்களை உடம்பின் பல அங்கங்களை வளைத்து பல விதமான படங்களை வெளியிடுகிறார்கள்.
இதில் பலர் மனதில் எழும்பும் கேள்வி ? இதென்ன யோகா ? இது நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமா ?? என்பது தான்.
“யோகா” என்ற சொல்லே “இயற்கையோடு இணைந்து /இயைந்து இருத்தல் “ என்பதாகும்.
இதில் ஆசனங்கள் என்ற நிலை மட்டும் பலருக்கும் அது கை கால்கள் அசைக்கும் ஒரு உடற்பயிற்சியாக தெரிகிறது.
மனிதன் என்ற சொல்லே “மனம்” என்ற சொல்லின் மூலத்தில் இருந்த வந்தது. நாம் எப்போதும் அடையாளபடுத்திக் கொள்ளும் உடல் , அதனை இயக்கும் உயிர், ஜீவன் என்கிற ஆன்மா என்ற மூன்றும் மனித இயக்கத்தில் இணைந்து இயங்குவது ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடையாளம் ஆகும்.
இதில் ஆன்மா என்ற மூலக் கூறிற்கு எந்த விதத்திலும் வெளியிலிருந்து ஆபத்து வராது. மனித உடலிற்கும் உள்ளிருந்து வரக் கூடிய ஆபத்து மிகவும் குறைவு. ஆனால் அந்த உடலிற்கு மனதினால் வரக் கூடிய ஆபத்து மிக அதிகம். இந்த மனித பிறவி மனதின் மாறுபாடுகளால் பல இன்னல்களுக்கு ஆட்படுகிறது. இந்த மனதின் அலைவரிசையை இயற்கையின் அலைவரிசையுடன் ஒன்றிணைய யோகா என்ற கலை உருவாக்கப்பட்டது.
பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆனதால் இந்த உடம்பு. இதில் மிக மெல்லியதான, நுண்ணியமானது காற்றாகும். இதனை எந்த வேகத்தில் மனித உடம்பில் உள்ளே புகுந்து வெளியேறுகிறது என்பதன் அடிப்படையிலேயே மனது அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் இயற்கையுடன் எப்பொதும் இயைந்தே இயங்கும் விலங்குகளின் இயக்கங்களை கூர்ந்தே கவனித்து “யோகா” என்ற கலையினை தங்கள் மனதை ஒருமுகப்படுவதில் தேர்ந்த தவச்சீலர்கள் உருவாக்கினர். மற்ற 4 பூதங்களையும் யோகாவின் மூலம் உணர முடியும், அவற்றின் இயக்களையும் சீராக்க முடியும்.
அதிகமாக ஆயுள் கொண்ட உயிரினங்களை இனம் கண்டு அவை தங்கள் உடலில் வாழும் ரகசியத்தை உணர்ந்து அவைகளின் இயக்கங்களை மனிதனும் செய்தால் மனித உடலில் ஜீவன் நீடிக்கும் என்பதை கலையாக யோகியர் மனிதர்களுக்கு வரப்பிரசாதமாக அமைத்தனர்.
ஆமைகள் நீண்ட காலம் வாழ அதுவும் தண்ணீரிலும் மண்ணிலும் வாழும் தன்மையை மனிதருக்கும் போதித்தனர். இதே போல் யானைகள், பாம்புகள், குதிரைகள், மயில் போன்ற பறவைகளின் அங்க அசைவுகளை, மரங்கள் போன்ற தன்மைகள் பல உடல் அசைவுகளை மனிதருக்கும் பழக்கி ஆரோக்கியமாக வாழ வழி வகுத்தனர்.
கா
லையில் எழுந்தவுடன் நாய்களும் பூனைகளும் கூட உடலை நீட்டி வளைத்து தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றன. தங்கள் உடல் உபாதைகளுக்கு எந்த புல்லை தின்றால் தெளியும் என்று இயற்கையுடன் இணைந்து வாழும் விலங்குகளுக்கு இயல்பாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் இயற்கையிடமிருந்து மிகவும் விலகி வாழும் மனித உருவங்களுக்கு தனது உடல் ஆரோக்கியத்தை பேண தெரியாமல் மருத்துவமனைகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இதனை மரத்தினடியில் தவம் இயற்றிய, மனதை ஒருமுகப்படுத்திய ஞானியருக்கு மிக எளிமையாக விளங்கியது. மரங்களை அவர்கள் தேர்தெடுத்ததும் அந்த உயிரினம் மட்டுமே எல்லா நேரங்களிலும் பிரபஞ்ச பேராற்ற்லுடன் நிலையான தொடர்பில் இருக்கின்றது. இதனாலேயே மரங்கள் அடர்த்தியாக உள்ள காடுகளையே மெய்யான ஞானமான பிரபஞ்ச பேராற்றலை உணர யோகியர் தேர்தெடுத்தனர். இதையே மரங்களைப் போல் தவம் செய்ய ஒற்றை காலில் நின்று பிரபஞ்ச சக்தியை உள்வாங்கினர்.
அதனையே “தடாசனா “ அல்லது “ விருக்ஷாசனா” என்று மரங்களை போல் உயர் ஞானத்தை அடைய வழிமுறை வகுத்தனர்.
இதனையே “தருக்கள் ஓங்கினால் தருமம் ஓங்கும்” என்று அருட்பிரகாச வள்ளலார் வலியுறுத்துகிறார். இன்றைய உலக சூழ்நிலையில் தருக்களின் எண்ணிக்கை குறைவதாலேயே “தருமம்” குறைவாகவும் “அதர்மம்” அல்லது ஓழுங்கின்மை அதிகரித்துள்ளது போல் மனிதம் மனம் உணர்ந்து தவிக்கிறது.
இதனாலேயே “பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்” மரத்தையே நமது சின்னமாக, அவற்றையே மிகப் பொறுப்புள்ள உயிரினமாக கருதுவதால் அடையாளமாக வைத்துள்ளோம். மரங்கள் வானத்தில் உள்ள மேகங்களை மட்டுமல்ல, நிழல் தருவதோடு நில்லாமல். “தரு” என்ற மூல சொல்லினால் “தருமம்” அல்லது இயற்கையின் ஓழுங்குதன்மையை பூமியில் நிலை நிறுத்துகின்றன.
மரங்களை போல் நீண்ட சுவாசத்தை இழுத்து யோக நிலையில் பிரபஞ்ச பேராற்றலை “யோக” நிலையில் பரமானந்தமாக பொறுப்புடன் சுவாசிப்போம். மரங்களை போல் அனைத்து உயிர்களையும் ஒன்றிணைந்து அன்போடு “யோக” நிலையில் பல்லாண்டுகள் இந்த பூமி பந்தில் ஆனந்த காற்றை சுவாசிப்போம்.
மரம் போல் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்தே வாழ்வோம்.
வாழ்க மரங்களுடன்.



Good explanation of Yoga. Very humbled to realise that the trees are the real Yogis.
ReplyDeleteyes the tree are the real yogis and gurus for human kind
Deleteயோகாவை பற்றிய அருமையான பதிவு
ReplyDeleteliving synchronously with nature is the need of the hour
DeleteGood and detailed explanation on yoga way of life. Lets practice Yoga and live yogic life like a Tree(The Yogi).
ReplyDeleteYoga is integral part of living
Delete