வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன்
மலை வாழ் மக்களால் தான் உலகையே காப்பாற்ற முடியும் கடந்த 25 ஜூலை 2022 இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு நடந்தேறியது. முதன் முறையாக பழங்குடி இனத்தில் பிறந்த ஒருவர் இந்தியாவின் முதல் குடிமகளாக குடியரசு தலைவராக திருமதி திரௌபதி முர்மு அம்மா அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டில் பதவியேற்றுள்ளது மிக வணங்கத்தக்க ஒரு நிகழ்வாகும். இந்த சூழ்நிலையில் நாம் மலைவாழ் மக்களை போற்ற வேண்டிய ஒரு தருணமாகும். மலைவாழ் மக்கள் வாழ்வியலை அவர்கள் நாகரீகத்தில் பின் தங்கியவர்களாக ஒரு அடையாளமிட்டு அவர்களது பூர்வீக வாழ்விடமான மலையை விட்டு இறக்கி அவர்களையும் ரேசன் கடைகளில் வரிசையில் நிற்க வைத்து அரிசி சோறு உண்ண வைத்து மாயையை உருவாக்கி அவர்கள் முன்னேறிவிட்டதாக புனைந்து நாம் நமது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கிவிட்டோம். இன்று நமது பூமி உருண்டை எதிர் நோக்கும் மிகப் பெரிய சவாலே பூமி வெப்பமயமாவதும் அதனால் கால நிலை மாற்றம், பெரு வெள்ளங்கள் மற்றும் பெரும் உணவு பஞ்சம். இதனால் மனித மூளை விபரீதமாக சிந்திக்க தொடங்கி நமக்கு இந்த பூமி பத்தாது வேறு ஏதாவது கிரகத்தில் குடியேறலாமா ??, அங்க...