வாழ்க வாழ்க மலைக் குறமகளுடன்

 மலை வாழ் மக்களால் தான் உலகையே காப்பாற்ற முடியும்




கடந்த 25 ஜூலை 2022 இந்தியாவின் சரித்திரத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு நடந்தேறியது. முதன் முறையாக பழங்குடி இனத்தில் பிறந்த ஒருவர் இந்தியாவின் முதல் குடிமகளாக குடியரசு தலைவராக  திருமதி திரௌபதி முர்மு  அம்மா அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டில் பதவியேற்றுள்ளது மிக வணங்கத்தக்க ஒரு நிகழ்வாகும்.


இந்த சூழ்நிலையில் நாம் மலைவாழ் மக்களை போற்ற வேண்டிய ஒரு தருணமாகும். மலைவாழ் மக்கள் வாழ்வியலை அவர்கள் நாகரீகத்தில் பின் தங்கியவர்களாக ஒரு அடையாளமிட்டு அவர்களது பூர்வீக வாழ்விடமான மலையை விட்டு இறக்கி அவர்களையும் ரேசன் கடைகளில் வரிசையில் நிற்க வைத்து அரிசி சோறு உண்ண வைத்து மாயையை உருவாக்கி அவர்கள் முன்னேறிவிட்டதாக புனைந்து நாம் நமது எதிர்காலத்தை கேள்வி குறியாக்கிவிட்டோம்.

இன்று நமது பூமி உருண்டை எதிர் நோக்கும் மிகப் பெரிய சவாலே பூமி வெப்பமயமாவதும் அதனால் கால நிலை மாற்றம், பெரு வெள்ளங்கள் மற்றும் பெரும் உணவு பஞ்சம். இதனால் மனித மூளை விபரீதமாக சிந்திக்க தொடங்கி நமக்கு இந்த பூமி பத்தாது வேறு ஏதாவது கிரகத்தில் குடியேறலாமா ??, அங்கே  என்ன உணவு உண்ணலாம்?? என்பது போன்ற போகாத ஊருக்கு வழி தேடி கொண்டிருக்கிறோம்.

இயற்கையிலிருந்து மிக குறைந்த அளவில் நுகர்ந்து மிக நிறைவான வாழ்க்கையை மலை வாழ் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். இயற்கையுடன் இயைந்து அதனை எதிர்த்து போராடாமல் இயற்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ்வதே மனிதனின் உச்சகட்ட நாகரீகமாகும்.

அவர்கள் மலைகளின் உச்சியில் வாழ்ந்த வரை காடுகள் அடர்த்தியாக, அனைத்து வித வன விலங்குகளுடன் மிக மகிழ்ச்சியான வாழ்க்கையை காட்டில் கிடைக்கும் மரங்களை கொண்டே வீடுகள் அமைத்து உடை உடுத்தி அன்றைய தேவைகளுக்கு வேட்டையாடி உண்டு உடுத்தி இயற்கையாய் இசைத்து இயற்கையுடன் இசைந்து வாழ்ந்து வந்தனர். 

தமிழர்கள் இதனை "குற்றாலக் குறவஞ்சி"யில் இசைப்பட படம்பிடித்து ஓசை நயத்துடன் மலையில் உற்பத்தியாகி ஓடிய ஆறுகளையும் அதனால் மலையின் செழுமையும் செய்யுளாய் படம் பிடித்து காட்டியுள்ளனர்.

மலைவாழ் இறைமையை தமிழ் கடவுளாக வேல் கொண்டு காக்கும் தெய்வமாக "முருகன்" , என்று "குன்று தோறும் குடிகொண்டுள்ள" இறைமையாக பண்டைய தமிழ் நாகரீகம் போற்றுகிறது. 

"கந்த சஷ்டி கவசம்" என்ற வழிப்பாட்டு பாடலில் "வாழ்க வாழ்க மலைக் குரு வாழ்க " என்று மலை வாழ் தலைவனை "குரு" வாக ஏற்று , அந்த மலை வாழ் அரசியான வள்ளி என்கின்ற குறமகளை " அனைவரின் தாயாக" மெய்ப் பொருள் தவஞானியான பால தேவராய சுவாமிகள் - பூவுலகில் வாழுகின்ற அனைத்து உயிர்களும் வறுமைகள் அனைத்தும் நீங்கி வளமோடு வாழ மலையாக முருகனையும் - ஆறின் முகம் அதில் உயிரோட்டத்துடன் ஓடக் கூடிய ஆறாக வள்ளி என்ற குறத்தியை தாயாக வணங்க வேண்டும் என்கிறார்.

( தமிழில் - ஆறு என்ற சொல்லை இரண்டு பொருளில் பயன்படுத்துகின்றனர். எண்ணிக்கையாகவும், நதி என்ற இரு பொருள் கொள்ளலாம். )

இதே போல் இயற்கை வழி வாழ்வியலை கொண்டாடிய சிந்து நதியின் கீழ் பகுதியில் வசித்த மக்கள் எல்லாம், மாடு மேய்க்கும் கறுத்த சிறுவன் ஒருவன் அந்த மலைகளையே இறைமையை, இயற்கையை வணங்க வேண்டும் என்பதற்காக மலைகளின் முக்கியத்துவத்தை கோவர்த்தன மலையை தூக்கி எடுத்துரைத்ததாக கொண்டாடி வருகின்றனர். 



இப்படி கொண்டாடப்பட்ட மலை வாழ் மக்களை மலையில் நாகரீகம் இன்றி வாழ்வதாக மலையில் இன்றி இறக்கி விட்டு விட்டு,அந்த மலைகளில் ஒரே பயிராக தேயிலை தோட்டங்களாக்கி, நாகரீகம் என்ற பெயரில் மலைகளில் ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, டார்ஜிலிங் என்ற நகரங்களை உருவாக்கி ஆறுகளின் ஓட்டத்தை தடுத்து, காட்டு வாழ் உயிரினங்களின் இருப்பிடங்களை ஆக்கிரமித்து மலைகளை நாம் பொறுப்பின்றி குப்பை மேடுகளாக்கி வருகிறோம்.

உலகளவில் பல நாடுகளிலும் "இந்திய" என்ற சொல் பாரம்பரியத்துடன் இயற்கையுடன் ஒத்து வாழ்ந்த பழங்குடியினரையே குறிப்பிடப்படுகிறது. 

உலகத்தில் உள்ள அநேக நாகரீகங்கள் ஆற்றின் படுகைகளின் உருவானதாக பல வரலாறுகள் கூறுகின்றன - சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி நாகரீகம், கங்கை, காவிரி, தாமிரபரணி, கோதாவரி, கிருஷ்ணா, மஹாநதி, நர்மதா என்ற நதிக்கரைகளில் பல கலைகள், இலக்கியங்கள் வளர்ந்தன. ஆனால் ஆறுகள், மரங்கள், மலைகளை அழித்து விட்டு பல ஞெகிழி குப்பை மலைகளுக்கு இடையே விதவிதமான நோய்களுடன் அநாகரீகமாக வாழ்ந்து வருகிறோம்.

இது வரை மனித சமுதாயம் விஞ்ஞானத்தில் எத்தனையோ முன்னேறங்களை கண்டுபிடித்துள்ளதாக கூறினாலும் ஒரே ஒரு மலையை கூட உருவாக்க முடியாது, இது வரை முடிந்ததில்லை. இயற்கையின் பிரும்மாண்ட படைப்பான மலையை போற்றி பாதுகாத்த உன்னத மலை வாழ் மக்களை மலையிறங்க வைத்ததன் மூலம் இன்று பல ஆறுகள் வற்றி, உணவு உற்பத்தி குறைந்து, பல கோடி மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். 

நகரமயமான பள்ளிக்கூட படிப்புகளினால் மனிதர்களுக்கும் இயற்கைக்குமான இடைவெளி அதிகமாகி இன்று பருவநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகி அதி தீவிர புயல் , வெள்ளம், தீவிர பஞ்சம் போன்ற இயற்கையின் சமநிலைக்கான போராட்டத்தில் மனிதர்களால் பல உயிர்களும் இன்னல்களுக்கு உள்ளாகி பூமி வாழ தகுதியில்லாத இடம் போல் உருவகிக்கப்படுகிறது.

இந்த தருணத்தில் இந்தியாவில் பழங்குடியினர் ஒருவர் முதல் பதவியை அலங்கரித்திருப்பது வெறும் அலங்காரமாக இல்லாமல் மலை வாழ் மக்கள் நேரடியாக இயற்கையிடம் பாடம் கற்ற மலைகளில் மீண்டும் குடியேறி இயற்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டு, மலைகள் எங்கும் அடர்ந்த காடுகளை வளர்த்து, ஆறுகளை மீட்டெடுத்து இந்த நாடு இழந்த இயற்கையை மீண்டும் பொலிவாக்கி உலகத்தின் முன் மாதிரி நாடாக்க பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் வாழ்த்துகிறது. சமவெளியில் பிறந்தவர்களையும் மலை வளங்களை மீட்டெடுக்கும் ஆர்வமுள்ளவர்களை ஊக்கமளித்து பொறுப்புடன் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ வழி வகுக்க வேண்டும். 

"அருணாசல" மான திருவண்ணாமலை முதல் அருணாசல பிரதேசத்தில் உள்ள மலைகள் வரை மலை வாழ் மக்கள் இயற்கையுடன் இணைந்து வாழ வேண்டும்.  புது குடியரசு தலைவரை பதவி பிரமாணம் செய்து வைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெயரும் திரு.இரமணா என்பது இயற்கை இந்த இயற்கையின் மகளை ஆசீர்வதித்த ஒரு உன்னதத்தில் அடையாளமாகக் கொள்வோம்.



 புது தில்லியில் குடியரசு தலைவர் இருக்கும் பகுதியை "ரைசினா ஹில்" என்று அழைக்கபடுகிறது. "ஹில்" என்னும் முன்னாள் மலை பகுதியில் இன்று வீற்றிருக்கும் அதிபர் இந்தியாவின் அனைத்து மலைகளிலும் மலை வாழ் மக்கள் அனைவரும் முன்பு போல் இயற்கை புனிதத்துடன் வணங்கி வாழ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் அதற்கு எல்லா வல்ல இயற்கை பேராற்றல் அருள் புரிய வேண்டும். 

வாழ்க பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம். 

வணங்குவோம் மலைகளை

வளர்ப்போம் மரங்களை

மீட்போம் ஆறுகளை

வாழ்வோம் வளங்களுடன்.


இதன் ஆங்கில ஆக்கம் பெருமதிப்பிறகுரிய குடியரசு தலைவர் பதவி ஏற்ற அன்றே பதிவிடப்பட்டது - English Version - https://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2022/07/tribals-need-to-be-at-top.html


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 

ஆகஸ்ட் 2022


Comments

Post a Comment

Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.

Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai