TEA estates Gone RAINFORESTS Coming
தேயிலை தோட்டங்களை சோலை மழைகாடாக்க முயற்சி இந்தியாவில் கடந்த 300 ஆண்டுகளாக சோலை மலை மழை காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை ஆங்கிலேய அரசு இந்தியாவின் பல மலைகளில் உருவாக்கி 200 அடி உயர்ந்த மரங்கள் இருந்த இடங்களில் 4 அடி உயர தேயிலை பயிர்களை விளைவிக்க ஆரம்பித்து இந்தியாவில் மிக அதிகமாக மழை பெய்த நீலகிரி மலைத் தொடரில் இன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அளவிற்கு ஆளாக்கியுள்ளது. ஆனால் இன்று தினமலர் நாளிதழில் வெளியான செய்தி இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் நற்செய்தி. கிட்டத்தட்ட 6000 ஏக்கர் பயன்பாட்டில் இல்லாத "டான்டீ" யின் தேயிலை தோட்டங்களில் சோலை மழைக்காடுகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=3158368 முறையாக செயல்பட்டால் இன்னம் ஒரு 20 வருடங்களில் இந்த இடத்தில் ஒரு அடர் வனம் உருவாக வாய்ப்புள்ளது. இது போல் இந்தியாவில் உள்ள தேயிலை தோட்டங்களும் மீண்டும் மழைக்காடுகள் ஆக வேண்டும் ஆனால் நமது தண்ணீர் தேவைகளை நிறைவேறும். தேயிலை வியாபாரம் குறையும், பலரின் தொழில்கள் பாதிக்கப்படலாம். தேநீரை விட குடிநீர் உயிர் வாழ அத்தியாவசியம் . ...