Posts

Showing posts from April, 2023

TREEmembrance மரம் நினைவை போற்றும்

Image
 

Black Board Teaching is not education கரும்பலகையில் கற்பிப்பது கல்வி அல்ல

Image
  விவசாயக் குடும்பத்தில் பிறக்காதவர்கள் கூட இன்று விவசாயத்தில் ஈடுபட வைத்ததற்கு நம்மாழ்வார் அய்யாவின் ஆக்கபூரவமான ஊக்குவிப்பே முக்கிய காரணம். பல கிராமங்களுக்கு சென்று பல விவசாயிகளிடம் பேசி, பழகி அவர்களை இயற்கை வழி விவசாயத்தின் பால் மீண்டும் இட்டு வந்து இன்று இயற்கை வழி விவசாயம் இந்த அளவிற்கு வளர்வதற்கு அயராது கடைசி மூச்சு வரை பாடுபட்டார். அய்யாவின் முயற்சியால் தான் மாட்டு சாணத்திலிருந்தே இடு பொருள் தயாரிக்கும் அளவிற்கு பல விவசாயிகள் முன்னேறி உள்ளனர். சிவன் கோவில்களில் பக்தர்களின் உடல்நலத்திற்காக மட்டுமே வழங்கப்பட்ட பஞ்சகவ்யாவை விவசாயிகளிடம் பிரபலபடுத்தினார். சுத்திகரிக்கப்பட்ட எண்ணை , இறக்குமதி செய்த பாமாயில் என்று பழகிப் போன மக்களை மீண்டும் மரச் செக்கெண்ணை நோக்கி திருப்பி இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட வீதிக்கு வீதி மரச் செக்கு எண்ணையை வரவழைத்த புரட்சி செய்தவர்.  அவருடைய மறுமலர்ச்சி புரட்சி கருத்துக்களில் இன்னமும் நாம் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டியது, கல்வி பள்ளிக் கூடங்களில் மட்டுமே கிடைக்கும் என்று நம்பும் மூட பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளதே. விவசாயியே பல்கலைகழகம்...