Tea = Cyclone டீ = புயல்
டிசம்பர் 4, 2023 வட தமிழக நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வந்து பாதித்தது, அது போன்ற புயல் வெள்ளத்தை தவிர்ப்பதற்கு பொறுப்புள்ள குடிமக்களாய் நாம் என்ன செய்யலாம் என்று நமது பதிவில் நகர் விட்டு நகர் விளக்கியிருந்தோம். இதே மாதத்தில் தமிழக தென் மாவட்டங்கள் நான்கிலும் டிசம்பர் 17,18 தேதிகளில் வரலாறு காணாத பெரு மழை பெய்து இன்னமும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவ்ட்டங்கள் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை. தாமிரபரணி ஆற்றில் ஒரு கட்டத்தில் ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெறும் 8000 கன அடி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தாமிரபரணி சென்னையில் ஓடியிருந்தால் சென்னையில் ஒரு மாதமானாலும் வெள்ளம் இறங்கியிருக்காது உயிர் சேதம் பல இலட்சத்தில் போயிருக்கும். தாமிரபரணி பெரும்பாலும் கிராமங்கள் ஊடாக பாய்வதால் மக்கள் தொகை பரவலாக இருந்த காரணத்தினால் உயிர் சேதங்கள் பெருமளவு குறைவாக உள்ளது. பருவமழையின் கர்ப்பம் கலைந்தது டிசம்பர் மாதம் - தமிழில் மார்கழி மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் இல்லை. ஆனால் இந்...