Tea = Cyclone டீ = புயல்

 


டிசம்பர் 4, 2023 வட தமிழக நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வந்து பாதித்தது, அது போன்ற புயல் வெள்ளத்தை தவிர்ப்பதற்கு பொறுப்புள்ள குடிமக்களாய் நாம் என்ன செய்யலாம் என்று நமது பதிவில்நகர் விட்டு நகர் விளக்கியிருந்தோம்.

இதே மாதத்தில் தமிழக தென் மாவட்டங்கள் நான்கிலும் டிசம்பர் 17,18 தேதிகளில் வரலாறு காணாத பெரு மழை பெய்து இன்னமும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவ்ட்டங்கள் இயல்பு நிலைக்கு முழுமையாக திரும்பவில்லை.

தாமிரபரணி ஆற்றில் ஒரு கட்டத்தில் ஒரு இலட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெறும் 8000 கன அடி செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கே சென்னை வெள்ளத்தில் மிதந்தது. தாமிரபரணி சென்னையில் ஓடியிருந்தால் சென்னையில் ஒரு மாதமானாலும் வெள்ளம் இறங்கியிருக்காது உயிர் சேதம் பல இலட்சத்தில் போயிருக்கும். தாமிரபரணி பெரும்பாலும் கிராமங்கள் ஊடாக பாய்வதால் மக்கள் தொகை பரவலாக இருந்த காரணத்தினால் உயிர் சேதங்கள் பெருமளவு குறைவாக உள்ளது. 

பருவமழையின் கர்ப்பம் கலைந்தது
டிசம்பர் மாதம் - தமிழில் மார்கழி மாதம் பொதுவாக மழை பெய்யும் மாதம் இல்லை. ஆனால் இந்த முறை இந்திய பெருங்கடல், வங்கக் கடல், அரபிக் கடல் என மூன்றும் சங்கமிக்கும்  கன்னியாகுமரியில் மூன்று கடல் திசைகளிலும் வெப்ப சலனத்தால் ஒரு சேர ஈரப்பதத்தை கூட்டி மழை மேகங்கள் சூல் கொள்ளும் மாதமான கர்ப்ப ஓட்டம் நடைபெறும் மார்கழியில் அடுத்த வருடத்திற்கு பெய்ய வேண்டிய பருவ மழை மேகங்கள் இப்பொது சூல் கொள்ளும் போதே கர்ப்பம் கலைந்து கருமேகங்கள் அடுத்த ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய மழையை ஒரே நாளில் பெய்துவிட்டு ஓய்ந்தது. இதற்கு மூலக் காரணம் நாம் அனைவரும் கூடி பூமி வெப்ப மண்டலத்தை அதிகரித்ததால் அதனை வேகமாக அணைக்க மேகங்கள் திரண்டன. 


மத்திய அரசின் பொறுப்பா ? மாநில அரசின் பொறுப்பா ?
பிரிட்டிஷ் (ஆங்கிலேய ) அரசு தான் பொறுப்பு

இந்தியாவில் தேயிலையை அறிமுகப்படுத்தியது ஆங்கிலேயர்கள் தான்.
( இந்த கட்டுரையை படித்து பாருங்கள் https://www.bbc.com/news/world-asia-india-36781368 )

அசோமின் மலைகளிலும் நீலகிரி மலை தொடர்களிலும் இலங்கையின் மலைகளிலும் தேயிலை தோட்டங்களை உருவாக்க உயரமான மரங்களுடன் இருந்த அடர்வனங்களை அழித்து இன்று பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் மலைகளில் வெறும் நாலே அடி உயரமான தேயிலையை பயிரிட்டு சிரபுஞ்சியை விட அதிகம் மழையை பெய்த நீலகிரியில் இன்று தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அளவிற்கு நிலைமை தேயிலையால் மாறிவிட்டது.

பொறுப்புள்ள குடிமக்களாய் நம் கடமை என்ன ? 

டீ குடிப்பதை நிறுத்த வேண்டும்.  

அரசுகள் சரியாக செயல்படுவதில்லை என்று அங்கலாய்க்கும் போதே நாம் இந்த நிலை மாற நம்மால் முடிந்த ஒரு சின்ன செயல் ஒரு பெரும் மாற்றத்திற்கு வித்திடும் என்பதை உணர வேண்டும். 

200 அடி உயரம் கூட தொடக் கூடிய மரங்கள் இருந்த காடுகளில் வெறும் நாலடி இருக்கும் ஒரு மர வகையை வளர்த்தால் மழை பொழிவு குறைந்து பருவ மழைகள் குறைந்து புயலாக ஒரு சில நாட்களில் ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழையை பெய்துவிட்டு போகிறது. 

நாம் பொறுப்புள்ள குடிமக்களாக செயல்பட்டால் தான் நம்மை ஆளும் அரசாங்கங்கள் பொறுப்புள்ள அரசுகளாக மாறும். ஒவ்வொரு அரசியல் வாதியும் அதிகாரியும் நம்மிடையே பிறந்தவர்கள் தான். குடிமக்கள் அனைவரும் குடிக்கும் ஒவ்வொரு குவளையிலும் ஒரு மாற்றம் ஒரு புரட்சி ஒளிந்திருக்கிறது. 

தேயிலை தோட்டங்கள் என்ன ஆவது ? 
அந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழப்பார்களா ?

இந்தியா 18ம் நூற்றாண்டு வரை உலக பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க முக்கிய காரணம், நமது நறுமண பொருட்கள் ( SPICES ) ஏற்றுமதியில் கொடிகட்டி பறந்தது. முக்கியமாக மிளகு.

தேயிலை தோட்டங்களை மிளகு தோட்டங்களாக்குங்கள் :
மிளகு கொடிகள் வளர உயரமான மரங்கள் தேவை. மரங்களுக்கு இடையே ஏலக்காயை பயிரிட்டால் ஒரே சமயத்தில் மரங்களினால் ( நெல்லி, தான்றிக்காய், கடுக்காய் போன்ற பலவிதமான பயன்களை தரும் மரங்களில் ) , மிளகினால், ஏலக்காயினால் பலவிதமான அறுவடைகள் கிடைக்கும் அதே சமயம் பூமியும் அதிகம் சூடாகாது தொழிலாளர்களும் ஆரோக்கியமான நல் வாழ்க்கை வாழலாம். 

புதுக்கோட்டை மிளகு புரட்சி
அதிக மலைகளே இல்லாத புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட சமவெளியில் மரங்கள் வளர்த்து மிளகு உற்பத்தியில் சாதனை படைத்து வருகிறார்கள் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள். 
அதனால் புதுக்கோட்டையின் புதிய கோட்பாடை ஏற்போம் நீலகிரியையும், மாஞ்சோலை, ஏற்காடு,  தேயிலை தோட்டங்களில் உயரமான மரங்கள் வளர்த்து மிளகு கொடிகளை படரவிட்டு பல கோடிகள் ஏற்றுமதியும் செய்து அதே சமயம் பருவ மழை பெய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குவோம், புயல் - வெள்ளம் தவிர்ப்போம்.




தேநீருக்கு பதிலாக வீட்டிற்கு வீடு துளசி மற்றும் செம்பருத்தி செடிகளை எளிதாக வளர்த்து அதன் இலைகளிலும் பூக்களிலும் மூலிகை சாறுகளை பருகுவோம்.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் தேநீருக்கு மாற்றை தொடர்ந்து நமது கட்டுரைகள் மூலமாகவும் செயல்கள் மூலமாகவும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம்.
அந்த கட்டுரைகள் இதோ :






Responsible Citizens iYakkam Dec 2023
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் டிச 2023


Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students