200 வ்ருடங்களை சேமித்தோம் - தருமம் தரு காக்கும்
தருமம் தரு காக்கும் 200 வருடங்களை சேமித்தொம் இரண்டு வருட முயற்சியில். கடந்த இரு வருடங்களாக , மாநில நெடுஞ்சாலை 6A நான்கு வழிச் சாலையாக விரிவாக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கத்தில் பல ஆயிர கணக்கான மரங்களை மாநில நெடுஞ்சாலைதுறை வெட்டி வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடி கிராமத்தில் இருக்கும் காசி விஸ்வநாதர் சிவன் கோவிலில் 200 வருடங்கள் பழமையான இரண்டு மரங்கள் - ஆலமரம் மற்றும் அரச மரங்கள் உள்ளன. இந்த இரண்டு மரங்களிலும் வெட்டுவதற்கான குறியீடுகளை துறையினர் போட்டதால் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம், சிவன் ஆலய நிர்வாகத்தினரின் துணையோடு கிராம மக்களிடம் கையெழுத்து மனுக்கள் வாங்கி அரசு துறையினர் அனைவருக்கும் அனுப்பி இந்த மரங்களை காப்பாற்ற முயற்சித்தோம். மாநில நெடுஞ்சாலை துறையினர் எல்லை கல் போட்டு இந்த இரண்டு மரங்களும் நெடுஞ்சாலையில் தான் வருவதாக உறுதி செய்தனர். நாங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனதுறை அதிகாரி, சுற்றுசூழல் செயலாளர் என்று பலருக்கும் மனுக்களை அனுப்பினோம். நெடுஞ்சாலை துறையினர் இந்த நிலையில் ஆல மரத்தை மட்டும் முழுவதுமாக வெட்டுவோம் என்றும் அரச...