200 வ்ருடங்களை சேமித்தோம் - தருமம் தரு காக்கும்
தருமம் தரு காக்கும்
200 வருடங்களை சேமித்தொம் இரண்டு வருட முயற்சியில்.
கடந்த இரு வருடங்களாக , மாநில நெடுஞ்சாலை
6A நான்கு வழிச் சாலையாக விரிவாக்கப்பட்டு வருகிறது.
இந்த விரிவாக்கத்தில் பல ஆயிர கணக்கான மரங்களை மாநில நெடுஞ்சாலைதுறை வெட்டி வருகிறது.
இந்த நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் மலையனூர் செக்கடி கிராமத்தில் இருக்கும் காசி விஸ்வநாதர் சிவன் கோவிலில் 200 வருடங்கள் பழமையான இரண்டு மரங்கள் - ஆலமரம் மற்றும் அரச மரங்கள் உள்ளன. இந்த இரண்டு மரங்களிலும் வெட்டுவதற்கான குறியீடுகளை துறையினர் போட்டதால் பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம், சிவன் ஆலய நிர்வாகத்தினரின் துணையோடு கிராம மக்களிடம் கையெழுத்து மனுக்கள் வாங்கி அரசு துறையினர் அனைவருக்கும் அனுப்பி இந்த மரங்களை காப்பாற்ற முயற்சித்தோம்.
மாநில நெடுஞ்சாலை துறையினர் எல்லை கல் போட்டு இந்த இரண்டு மரங்களும் நெடுஞ்சாலையில் தான் வருவதாக உறுதி செய்தனர்.
நாங்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனதுறை அதிகாரி, சுற்றுசூழல் செயலாளர் என்று பலருக்கும் மனுக்களை அனுப்பினோம். நெடுஞ்சாலை துறையினர் இந்த நிலையில் ஆல மரத்தை மட்டும் முழுவதுமாக வெட்டுவோம் என்றும் அரச மரத்தில் கிளைகள் மட்டும் நீக்குவோம் என்றனர்.
எங்கள் குழு இதனாலும் மனம் தளராமல் மரங்களை காப்பாற்ற முயன்ற வண்ணம் ஆலய நிர்வாகி திரு அசோக் குமார் மற்றும் பொ.கு.இ யின் இயற்கை ஆர்வலர் திரு. மகேந்திரன் தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினரை சந்திப்பதும் , மனுக்கள் கொடுப்பதிலும் ஈடுபட்டனர். இதிலும் குறிப்பாக இந்த கிராமத்தின் பொறுப்புள்ள சிறுவர்கள் இந்த மரங்களை சுற்றி மனித சங்கிலி போல் சுற்றி நின்று தங்கள் எதிர்காலத்திற்கும் இந்த மரங்கள் அவசியம் என்று வெளிப்படுத்தினர். பிரபஞ்சம் இந்த பிஞ்சு உள்ளங்களின் வேண்டுதலை கேட்கும் என்று நம்பினோம்.
இந்த சூழலில் ஆலமரத்தை எடுத்தே தீர்வார்கள் என்று உறுதியானதும் அதனை எடுத்து போய் அருகிலேயே இருக்கும் ஒரு குளத்தின் கரையில் நடுவதற்கு இடத்தினையும் குறித்தோம்
இதே சமயத்தில், பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் சார்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் பாரம்பரிய முறைப்படி கோவில் காளை வளர்த்து , மாதந்தோறும் பிரதோஷ பூஜையின் போது நிஜ உயிருள்ள காளைக்கு முதல் பூஜை செய்து நடமாடும் சிவனாக வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
கிராமங்களில் காலம் காலமாக கடைபிடித்து வந்த சுதந்திரமாக வலம் வந்த கோவில் காளை மூலமாக அந்த கிராமத்தில் இருக்கும் பசுக்களுக்கு நாட்டு மாடுகளை சினையாக்கி வந்த பாரம்பரியத்தை மீண்டும் கொன்டு வருவதே நோக்கம். பாராளுமன்றத்தில் பாரத அரசு செங்கோல் மீண்டும் நிறுவியதும் அதில் இருக்கும் நந்தியாகிய காளை தர்மத்தின் அடையாளமாக போற்றப்பட்டதில் இருந்து காளையின் முக்கியத்துவம் கூடியது.சற்றும் எதிர்பாராத நேரத்தில் சிவன் கோவிலுக்கு ஒரு காளையை மார்ச் 2024ல் விவசாயி ஒருவர் நேர்ந்துவிட்டார்.
கோவிலில் ஒரு காளையை பார்த்து கொள்ள ஆள் பற்றாக்குறை மற்றும் நிதி தேவையும் இருந்தது.
இருந்தும் ஒரு பிரதோஷம் வரை காளையை கோவிலில் பராமரிக்க திரு. அசோக் ஏற்பாடுகளை செய்தார். ஆனால் இந்த ஜுன் 2024 வரை வந்த 8 பிரதோஷங்களில் இந்த நடமாடும் காளைக்கு முதலில் பூஜை நடத்தி உணவு கொடுத்த பின் கல் நந்திக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
எங்கள் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக , 2 ஜுன் 2024 அன்று நெடுஞ்சாலை துறையினர் ஆலமரத்தில் மூன்றே மூன்று கிளைகளை மட்டும் நீக்கிவிட்டு சாலை விரிவாக்கத்தை நிறைவு செய்தனர். 200 ஆண்டுகள் பழமையான மரம் முழுமையாக நின்று எங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தது. இரண்டு மரங்களை காப்பாற்ற நாங்கள் எடுத்த முயற்சி இன்று காளையும் சேர்த்து மூன்று உயிர்களை காக்கும் இயக்கமாக வளர்ந்துள்ளது. இந்த முயற்சி காளை என்னும் இறைமையின் ஒரு வரமாக எங்களுக்கு தோன்றியது.
"தர்மோ ரக்ஷ்தி ரஷிதாஹா " ( தருமம் காப்பவரகளை தருமம் காக்கும் ) என்ற சமஸ்கிருத பழமொழிக்கேற்ப இந்த நிகழ்வு நடைபெற்றது.
தருமம் என்ற சொல் "தரு" என்ற மூல சொல்லில் இருந்தே வந்துள்ளது. "தரு" என்ற சொல்லிற்கு "மரம்" என்ற பொருள் சம்ஸ்கிருதத்திலும் "தருகின்ற" என்று பொருள் தமிழிலும் வழங்குகிறது.
இந்த தருணத்தில் மரங்களும் காளையும் ஒருவரை ஒருவர் காப்பாற்றியுள்ளனர். அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் கூற்றின் படி "தரு ஓங்க தருமம் ஓங்கும்" - அதாவது மரங்களின் அடர்த்தி கூட கூட தருமம் தழைக்கும் என்ற வாக்கு நிகழ்ந்தே காட்டிவிட்டது.
இங்கு அந்த தெய்வீக காளையை ஆலமரத்தினடி அரசமரத்தினடியில் காப்பாற்ற வேண்டி வந்தது, அந்த செங்கோல் தருமத்தின் அடையாளமான காளை தன்னை காப்பாற்றிய மரங்களை காத்தி நிற்கிறது.
இந்த 200 வருடங்கள் பழமையான மரங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலைதுறை 200 எண்ணிக்கை 1 வருட மரக் கன்றுகளை இன்று நட்டாலும் ஒரு 200 வருட மரத்திற்கு இணையாகாது என்பதே இயற்கை நமக்கு உணர்த்தும் பாடம்.
எங்களது முயற்சியினால் இரண்டு 200 வருட மரங்கள் காப்பாற்றபட்டது பெரு மகிழ்ச்சியே.
![]() |
| Bull seen behind the tree |
![]() |
| Mr Ashok with the BULL |
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்
Responsible Citizens iYakkam June 2024









Hearty congratulations and our gratitude for saving the 200 year old trees and the bull. Your efforts are inspirational to all of us.
ReplyDeleteYou are part of the team in saving the tree
Delete