நம்ம ஆழ்வார்களை போற்றுவோம் Hail Nammazhwars
இன்று (30.12.2024) இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி தெய்த்திரு. நம்மாழ்வார் அய்யா அவர்களின் 11வது ஆண்டு நினைவு நாள். அய்யாவின் உருவம் தான் மறைந்ததே அன்றி அவரின் உணர்வு இன்று எண்ணற்ற இயற்கை வழி விவசாயம் செய்யும் பல உழவர்களிடம் ஊடுபாவாக நிறைந்தே காணப்படுகிறது. கத்தியின்றி, இரத்தம் இன்றி ஒரு உண்மையான பசுமை புரட்சியை அய்யா பல்வேறு கிராமங்களுக்கும் நடந்து கூட சென்று பல நல்ல உள்ளங்களில் உள்ளொளியை ஏற்றி வைத்தார்கள். இன்று பல இளைஞர்களும் காணி நிலமாவது விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆர்வம் ஊட்டியவர் நம்மாழ்வார் அய்யா. அவரின் பெயரின் மூலக் காரணமான முதலாம் நம்மாழ்வாரையும் இன்னாளில் நினைவு கூறுவோம். ஆழ்வார்கள் அனைவரும் மார்கழி மாதத்தை பெருமாளை முழுவதுமாக வணங்குவதற்குரிய மாதாமாக என்றும் கொண்டாடியவர்கள். முதலாம் நம்மாழ்வாரும் இயற்கையின் ஒவ்வொரு படைப்பிலும் இறைவனை கண்ட ஒரு சிறந்த தத்துவ பேரறிஞர். அவர் என்றென்றும் தான் பெற்ற ஞானத்தை ஒரு புளிய மரத்தினடியில் அமர்ந்தே அருளினார்கள். மரத்தினடியே இயற்கையில் இறைமையில் லயிக்க, பிரபஞ்ச பேராற்றலை உணர ஒரு உன்னத தலமாக போற்றியவர். நம் கால நம்மா...