நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்
நம்மாழ்வாரை தேடி- பயணம் -2 நம்மாழ்வார் தெரு பெயர் பலகை இட்டு 5 வருடங்கள் நிறைவும் நம்மாழ்வார் அய்யாவின் 87 ம் பிறந்த நாளை கொண்டாடு விதமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாச்சார் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இணைந்து கொண்டாடினோம். கடும் வெயில் நேரத்திலும் "இயற்கை திரும்பும் பாதை"யின் அவசியத்தை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ண குமார், இந்த கடும் வெயிலே நம்மாழ்வார் விட்டு சென்றுள்ள இயற்கை மீட்பு பணியை இன்னும் வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் விளக்கினார். இந்த கிராமத்தின் முன்னோடி இயற்கை வழி விவசாயி திரு தசரதனின் பிள்ளைகள் செல்வன். யோகேஷ், செல்வி வேணி, செல்வி புவி ஆகியோர் நம்மாழ்வார் பற்றிய தங்களின் புரிதலை மழலை மொழியில் வெளிப்படுத்தினர். தங்கள் தலைமுறையிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் என்று உறுதி மொழி அளித்தனர், நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் போது தான் திரு தசரதனின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் கிடைத்தது . இது வரை வெறும் ஜாதக குறிப்பாக தமிழ் மாதமும் பிறந்த நட்ச...