நம்மாழ்வார் தெரு- 5ம் ஆண்டு- இரண்டாம் நம்மாழ்வார்

 நம்மாழ்வாரை தேடி-  பயணம் -2

நம்மாழ்வார் தெரு பெயர் பலகை இட்டு 5 வருடங்கள் நிறைவும் நம்மாழ்வார் அய்யாவின் 87 ம் பிறந்த நாளை கொண்டாடு விதமாக, திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாச்சார் கிராமத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் இணைந்து கொண்டாடினோம்.

கடும் வெயில் நேரத்திலும் "இயற்கை திரும்பும் பாதை"யின் அவசியத்தை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ண குமார், இந்த கடும் வெயிலே நம்மாழ்வார் விட்டு சென்றுள்ள இயற்கை மீட்பு பணியை இன்னும் வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை அனைவருக்கும் விளக்கினார்.

இந்த கிராமத்தின் முன்னோடி இயற்கை வழி விவசாயி திரு தசரதனின் பிள்ளைகள் செல்வன். யோகேஷ், செல்வி வேணி, செல்வி புவி ஆகியோர் நம்மாழ்வார் பற்றிய தங்களின் புரிதலை மழலை மொழியில் வெளிப்படுத்தினர். தங்கள் தலைமுறையிலும் இயற்கை விவசாயத்தை கடைபிடிப்போம் என்று உறுதி மொழி அளித்தனர்,


நம்மாழ்வார் அய்யாவின் பிறந்த நாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யும் போது தான் திரு தசரதனின் பிறந்த நாள் பற்றிய குறிப்பும் கிடைத்தது . இது வரை வெறும் ஜாதக குறிப்பாக தமிழ் மாதமும் பிறந்த நட்சத்திரமும் மட்டுமே அவரிடம் இருந்தது. அந்த குறிப்பை வைத்து அவரின் ஆங்கில பிறந்த நாளை பார்த்த போது - என்ன ஆச்சர்யம் ???

தசரதனும் ஏப்ரல் 6ம் தேதி தான் பிறந்திருந்தார். இந்த மேல்பாச்சார் கிராமத்தில் யாருமே இயற்கை விவசாயத்திற்கு திரும்பாத நிலையில் நம்மாழவார் அய்யாவை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத நாட்களிலும் தன் தந்தை உடல் உபாதைகளால் இறந்ததால், இனி வயலில் எந்த விஷமும் பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதியுடன், எந்த ஒரு பொருளாதாரா நிலையிலும் கொள்கையில் விடாப்பிடியாக இயற்கை விவசாயம் செய்து வரும் திரு தசரதனும், ஒரு நம்மாழ்வாரே.  அந்த தேதியில் பிறந்தாலே இயற்கையின் பால் நாட்டம் தானாக வருமோ என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 'ஊர் தோறும் நம்மாழ்வார்"களை அடையாளபடுத்தி வருகிறது. இந்த தேடுதல் பயணம் தொடரும்.

இந்த நிகழ்ச்சியினை இயற்கை ஆர்வலர், பொறுப்புள்ள இளைஞர் திரு. பெருமாள் ஏற்பாடுகள் செய்தார்.


6 ஏப்ரல் 2025

பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்

Responsible Citizens iYakkam


Comments