Posts

Showing posts from December, 2025

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Image
  மலையோர கிராமங்களில் , வனங்களுக்கு அருகே இருக்கும் கிராமங்களிலும் விவசாயிகள் அதிகம் சந்திக்கும் சவால்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் பயிர்களை காட்டு விலங்குகள் -காட்டு பன்றி, மான்கள், குரங்குகள், மயில்கள் போன்றவைகளும் மற்றும் பெரிய காடுகள் அருகே இருக்கும் வயல்களில் யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளும் பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டு விலங்குகள் காடுகளில் போதிய உணவில்ல்லாததால் தான் பெரும்பாலும் காடுகளுக்கு அருகே இருக்கும் வயல்களுக்கு உணவு தேடி வருகின்றன. இதனால் காட்டு விலங்குகளுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்க பல வகையான பழ மரங்களை வளர்க்கும் முயற்சிகளை தொடர்ந்து பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் முயன்று வருகிறது. கடந்த 30 நவம்பர் 2025 அன்று திருவண்ணாமலை மாவட்டம், மேல்பாச்சார் கிராமம் திரு தம்பி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மலையில் இருந்து ஓடி வரும் மழை நீரை தேக்குவதற்காக கட்டப்பட்டுள்ள்   கசிவு நீர் குட்டையில்  பழ மரக் கன்றுகளை நட்டோம்.  இயற்கை ஆர்வலர் திரு ரமேஷ் அனுமகொண்டா அவர்கள் இந்த மரக் கன்றுகளை ஏற்பாடு செய்தார். மா பலா கொய்யா நெல்லி சிறு நெல்லி மாத...