Rain clouds to Karnataka - Dam it கர்நாடகா செல்லும் மழை மேகங்களுக்கு அணை கட்டுவோம்

 



வருடாவருடம் காவிரி நீர் பகிர்தலில் வரும் சங்கடம் இந்த ஆண்டு இன்னமும் அதிகரித்து பெங்களுரு நகரத்திற்கு தண்ணீரே இல்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.  தண்ணீரை வைத்து வெற்று அரசியல்வாதிகள் மக்களின் உணர்ச்சிகளோடு பொறுப்பில்லாமல் விளையாடி "தண்ணீர் தரமாட்டேன் தண்ணீர் தரமாட்டேன்"  என்று சொல்லச் சொல்ல இன்று கர்நாடகாவின் தலை நகரமான பெங்களுரு தன் கொள்ளளவை காட்டிலும் அதிக மக்களையும் கட்டிடங்களையும் நிரப்பி இன்று மிக மோசமான தண்ணீர் தட்டுபாட்டில் தவித்து பல மக்கள் அன்றாட குடி நீர், குளிக்க நீர் இல்லாமல் தவிக்கிறார்கள். 

1. காடுகளை அழிப்பது வளர்ச்சி அல்ல
Destroying Forests is not Development

இதற்கு நிரந்திர தீர்வு - மனிதனால் இதுவரைக்கும் உருவாக்கவே முடியாத மலைகளில் அடர்வன காடுகள் வளர்வதற்கு உகந்த சூழ்நிலைகளை உருவாக்குவதே. தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் வளர்ச்சி என்ற போர்வையில் பல காடுகளில் சாலைகள் போட்டு வனங்களின் அடர்த்தியை குறைத்து விட்டோம்.  இதனால் அளவோடு பல மாதங்களில் பெய்த பருவ மழை இன்று சில நாட்களில் அடர் வெள்ளமாக பெய்துவிட்டு போய்விடுகிறது.

2. மலைகள் தோறும் மரங்கள் - அடர்வன காடுகள்
Trees on Every Hill - Dense Forests

தமிழ்நாட்டின் கடற்கரையில் வங்காள கடலின் நீர் தான் ஆவியாகி மழை மேகங்களாக மாறி மிகுந்த குளிர்ந்த மலை தொடர்களில் மழையாக இறங்கி ஆறாகிறது. இந்த ஆறின் ஒரு பகுதி மீண்டும் கடலில் கலந்தால் மட்டுமே இந்த மழை சங்கிலி தொடரும்.  

தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மேற்கு தொடர்ச்சி மலைகளில் பல இடங்களில் வனங்களில் மரங்களும் புற்களும் நிறைந்த சோலை வனக் காடுகள் அழிந்து மழை மேகங்கள் இன்று தரை இறங்கவே முடியாத அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.
அதனால் இந்த மலை தொடர்களில் அருகில் இருக்கும் கிராம வாசிகள் அவர்கள் ஊர்களில் இருக்கும் குன்றுகள் அனைத்திலும் அடர்வனங்கள் உருவாக்குவதில் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.  பொது மக்கள் பொறுப்பெடுத்து கொண்டால் மட்டுமே இந்த நிலை மாறும். 

3. மலைவாழ் மக்கள் ஆறுகள் உருவாக்குவதில் முக்கிய பங்கு
Hill Tribals contribute for River generation & Rejuvenation

மலை வாழ் மக்கள் மலைகளில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வரை பருவ மழை பெய்வதில் எந்த பாதகமும் இருந்ததில்லை. இன்று மலைவாழ் மக்கள் பலரையும் மலையிலிருந்து இறக்கி மலைகளை நாம் அழித்து வருகிறோம். இனிமேலாவது மலையில் இயற்கையுடன் ஒன்றி வாழ விருப்பம் உள்ளவர்களை அடர்வனங்கள் வளர்க்க அதனையே அவர்களுக்கு ஒரு வேலையாக தந்து அரசுகள் நீர் ஆதாரதங்களை பெருக்கி கொள்ள வேண்டும். நகரும் நதிகளை உருவாக்குபவர்களையே உண்மையான நாகரீகமானவர்களாக மக்கள் வணங்க வேண்டும்.

4. புற்களும் புலிகளும் இல்லாத காடுகளில் ஆறுகள் ஓடுவதில்லை
Grass & Tigers make rivers flow

மலைகளில் மரங்கள் மட்டும் அல்ல, நில அரிப்பை தடுக்க வல்லது கரிம வளத்தை காக்க வல்லது புற்களே ஆகும், அதே போல் அந்த புற்களின் அடர்த்தியை காப்பதற்காகவே இயற்கையால் படைக்கைப்பட்ட வரி புலிகளும் வனங்களில் வசித்தால் மட்டுமே ஆறுகள் பருவநிலையால் பாதிப்படையாமல் சீராக ஓடி அனைவரின் தாகத்தையும் தணிக்கும்.

5. காட்டு விலங்குகள் வெளியே வருகிறது
Wild Animals enters villages

வனவிலங்குகள் வனத்தைவிட்டு வெளியே வர விரும்புவதில்லை. மனிதர்களின் தொடர் ஆக்கிரமிப்பு காரணங்களால் தான் விலங்குகள் அவர்களின் வாழ் இடத்தில் உணவில்லாமல் வெளியே வர வேண்டியிருக்கிறது. அதுவும் அவர்களின் பழைய வாழ்விடங்களை தேடியே வருகின்றன. மிருகங்கள் கிராமத்தில் புகுவதில்லை. கிராமங்களே வனங்களில் புகுந்துள்ளன என்பதை உணர்ந்து வனங்களில் சாலைகள் போடுவதை முதலில் நிறுத்துவோம். 

6. செயற்கையான காட்டுத்தீ 
Artifical Forest Fire

இன்று பல மலைகளிலும் மனிதர்களால் தீ மூட்டப்பட்டே காட்டுத்தீ பரவி பல காடுகள் அழிக்கப்பட்டு அதனை நாம் தொழில் சாலைகளாக, குடியிருப்புகளாக, விவசாய நிலங்களாக மாற்றி வருகிறோம். இதற்காக ஒரே ஒரு தீக்குச்சியால் பல ஆயிரக் கணக்கான உயிரினங்களை அதன் வாழ்விடங்களை நாம் அழித்து வருகிறோம். மலைகள், மரங்கள், புற்களின் கூட்டணியே நமது தண்ணீர் தாகத்தை உணவு தேவைகளை தீர்க்க வல்லது.

7. நகரம் விட்டு நகர் என்பதே தாரக மந்திரம்
Quit Cities is the Mantra

முன்பு நகரங்கள் நதிக்கரையொரங்களில் தான் உருவாகின. ஆனால் இன்று பெங்களுரு , சென்னை போன்ற நகரங்கள் தண்ணீரின்றி நரகங்களாக மாறி வருகின்றன. வனங்களின் அடர்த்தியை உயர்த்தாமல் நாம் நகரங்களில் மனிதர்களின் கட்டிடங்களின் அடர்த்தியை கூட்டிக் கொண்டு வருகிறோம். இன்றைய விஞ்ஞான தொழிற் நுடபங்களை கிராமங்களிலிருந்தே கையாள போதுமான வசதிகள் வந்துவிட்டன. அதனால் நகரங்கள் விட்டு நகர வேண்டிய நேரம் இது. 


பொறுப்புள்ள குடிமக்களாக நாம் இதனை செய்தால் மட்டுமே
இந்த பூமியில் இனியும் வாழ முடியும்.

8. பல ஆறுகளில் அணை கட்டுவதே மணல் எடுக்கத்தான் 
Dams are also meant for Sand mining

இனியும் நாம் இந்த பூமியில் மேலும் நகரங்களில் அடுக்குமாடிகள் கட்டி வாழ 
பல மலைகளை உடைத்தும் பல ஆறுகளில் மணல்களை அள்ளியும் நகரங்களை கட்டி வருகிறோம்.  இதற்கு போதுமான மலைகள் இன்று பூமியில் இல்லை, மணல்களுக்காக பல ஆறுகளிலும் அணைகள் கட்டி அதில் இருந்து மணல் அள்ளுகிறோம். நமது இந்த போக்கு இயற்கை வளங்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே இயற்கை பேரிடர்களும் ஏற்படுகின்றன.   நமது வாழ்வியல் முறையில் மாற்றம் தேவை. 


பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் - மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தினை அனைத்து மலை அடிவார கிராமங்களுக்கும் கொண்டு செல்ல முயன்று வருகிறது. மலைகள், மரங்கள், இயற்கையோடு ஒன்றி வாழ அனைவரையும் அன்போடு அழைக்கிறது.





Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students