A School Teacher sows seeds on the minds of his students & on hills மாணவர்கள் மனதிலும் மலைகளிலும் விதைகள் தூவும் ஆசிரியர்
மாணவர்கள் மனதிலும் மலைகளிலும் விதைகள் தூவும் ஆசிரியர்
A Teacher sows seeds on the minds of his students & on hills
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி மலையனூர் செக்கடி நடுநிலை பள்ளியில் விதை பந்துகள் தூவும் நிகழ்ச்சியில் ஏரியில் 1000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது
We planted 1000 nos palmyra (Panai in Tamil) seeds in the village lake on 21st august 2018
http://responsible-citizens-iyakkam-trust.blogspot.com/2018/08/seed-for-change-in-thiruvannamalai-to.html
அன்றே ஒரு மலையில் தயார் செய்திருந்த விதைப் பந்துகள் போட முயற்சித்தோம். ஆனால் அன்று நேரம் குறைவு காரணமாக மாணவர்களை மலைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. நாங்கள் ஆசிரியர் திரு . சஞ்சீவி குமாரிடம் மலைகளில் மாணவர்கள் தயாரித்த விதை பந்துகளை போடுவது பற்றி ஆலோசித்தோம்.
We planned to put the seeds on the hills on the same day itself. But due to shortage of time, we could not take the children to the hills on that day.
நடுவில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றதால் இரு தரப்பிலும் ஏற்பாடு செய்வதிலும் நேரம் எடுத்தது .
In between lot other events happended on either side, so we couldnt organise the sowing on the hills for sometime.
ஆசிரியர் மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்து ஒவ்வொரு மாணவரும் தங்களால் இயன்றதை செய்து பல்லாயிர கணக்கான விதை பந்துகளை பல மரங்களிலிருந்து விதைகளை அவர்களே சேகரித்து தயாரித்திருந்தனர்.

With the motivation from the teacher, students have gathered lots of seeds & prepared seed balls in thousands.
ஆசிரியர் திரு . சஞ்சீவி குமார் தன் இடைவிடாத முயற்சியால் டிசம்பர் 13 ம் தேதி 2018 மாணவர்களுடன் மலையனூர் செக்கடி கிராமத்தில் உள்ள பொட்டாங்கல் மலையில் ஏற்பாடு செய்திருந்தார் . ஆனால் அன்றும் எங்கள் இருவருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆனதால் நாங்கள் விடியற் காலை 6 மணிக்கே மலைக்கு செல்ல முடிவெடுத்தோம் . ஆனால் அன்று இருந்த பனிமூட்டத்தில் அதுவும் விடியற் காலையிலேயே மாணவர்களை அழைத்து செல்ல முடியாதாகையால் நாங்கள் இருவர் மட்டும் சென்று மலையில் போடுவதென்று தீர்மானித்தோம்.
Teacher Mr. Sanjeevi Kumar had made continuous efforts to organise the seeds sowing on the hills. Finally we fixed it for Dec 13th, 2018, but due to various engagements, we could go only in the early morning on top of the hill. So we could take the school students so early in the morning with lot of fog on the hills.
அதன்படியே காலை நேரத்திலேயே எல்லா விதை பந்துகளையும் மலையின் பல பகுதிகளிலும் தூவினோம் .
we sowed the seeds in the morning itself.
ஆசிரியரின் விடா முயற்சியை அவரின் ஈடுபாட்டையும் பார்த்த போது இது போல் ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் தங்கள் பள்ளிகளில் முயற்சி எடுத்தால் ஒவ்வொரு மாணவர்களின் மனத்திலும் மரம் வளர்ப்பை பற்றி விதை போட்டால் ஒவ்வொரு மாணவரும் பல்லாயிர கணக்கான விதை பந்துகள் போட்டால் நமது பூமி மீண்டும் பசுமையாகும் நாள் மிக அருகிலேயே உள்ளது என்ற நம்பிக்கை பிறந்தது.
If every teacher takes efforts & sows seeds on the minds of their pupil & prepares & sows seeds on the hills, the whole district, state, Conutry, world will become more greener & bring us more rains & water.
நமது ஊர்களில் உள்ள ஒவ்வொரு மலை குன்றுகளிலும் அந்தந்த ஊரின் மாணவர்களும் இளைஞ்ர்களும் இணைந்து செயல்பட்டால் நம்மால் ஒவ்வொரு மாலையிலும் மழையை இறக்கி ஆறுகளை ஓட வைத்து நமது தண்ணீர் தேவைகளை தீர்த்துக் கொள்ளலாம் .

(பின் குறிப்பு : திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் பெரும்பான்மையான குன்றுகளில் முள் மரங்களே அதிகம் வளருகின்றன அவைகளும் அதிகபட்சம் 10 - 15 அடி உயரமே வளருகின்றன. இந்த படத்தில் உள்ள மலையில் அடர்த்தியாக இருப்பது போல் தோன்றினாலும் குட்டை ரக முள் தாவரங்களே அதிகம் வளர்கின்றன . அதனால் 50 அடி உயரமான மரங்களை நாம் வளர்க்க முற்படுகிறோம். குறிப்பாக ஆல மரங்களையும் அரச மரங்களையும் வளர்க்க முற்படுகிறோம். அரச, ஆல மரங்கள் மர வேலைப்பாடுகளுக்கு பயன்படாதததாலும் தெய்வ மரங்களாக கருதப்படுவதால் கிராமத்தினர் இந்த இரு மாற வகைகளை அதிகம் வெட்டுவதில்லை.
Post Script :
Most the hillocks in Thiruvannamalai District, only thorny bushes & shrubs are growing in abundance which grow max. only up to 10 to 15 feet tall. we need at least 50 feet tall trees to cool the wind & extract the moisture from the atmosphere. we are planting banyan tree & peepul tree, which can grow even beyond 50 feet tall & villagers will not chop off these kind of trees. ) 





Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society