Tree Man Sunderlal Bahuguna Chipko
மரங்காவலர் சுந்தர்லால் பகுகுணா அய்யா படம் வரைந்துள்ள ஒவியர் திரு சதிஷ் ஆச்சார்யாவிற்கு நன்றி சிப்கோ இயக்க நிறுவனரும் சூழலியலாளருமான திரு. சுந்தர்லால் பகுகுணா அய்யா இன்று 21.5.21 இயற்கேயோடு இரண்டற கலந்தார். மண்ணிற்கு உரமானார். சுந்தர்லால் பகுகுணா (1927-2021) காந்தியவாதியும் இந்தியாவின் ஆரம்பகால சூழியல் போராளிகளில் ஒருவரும் ஆவார். இமையமலைக் காடுகளைக் காக்கும் பொருட்டு சிப்கோ இயக்கத்தைத் துவங்கினார். கனிமச் சுரங்கங்களாலும் பெரிய அணைக்கட்டுக்களாலும் ஏற்படும் சூழியல் அழிவுகளை எதிராகப் பல போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளார். இமையமலைக் காடுகள் வேகமாக வெட்டி அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலங்களில் காடுகளைப் பாதுகாக்கும்பொருட்டு சிப்கோ இயக்கம் துவங்கப்பட்டது. 1970களில் இமியமலைப் பகுதிகளில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் வழக்கத்தைவிட அதிக அளவில் நிகழ்ந்தன. காடழிப்பும் பெரிய கட்டுமானங்களுமே அவற்றுக்குக் காரணம் என மக்கள் நினைத்தனர். இந்நிலையில் 1974ம் வருடம் மார்ச் 24ம் தேதி ரேனி என்னும் கிராமத்தின் ஆண்கள் எல்லாரும் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ...