A Pedestrian Traffic Ramasamy

சாலை வடிவமைப்பில் பாதசாரிக்கே முன்னுரிமை
Pedestrian First priority in Road Design



சென்னையில் பாதசாரிகளுக்காகவும் பல பொதுப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து கொண்டே இருந்த சமுதாயத்திற்காகவே தன் வாழ்நாளின் கடைசி வரை போராடிய ஒரு போர் வீரர் நேற்று ( 4th May 2021 ) சென்னையில் உடல் நீத்தார். 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகே உள்ள நடை பாதைகளில் மக்கள் நடைபாதையை அடைத்த கடைகளை அகற்ற தொடர் போராட்டம் நடத்தி தன் சொந்த பணத்தில் வழக்காடி வென்று பாதசாரியின் உரிமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தார் டிராபிக் திரு. ராமசாமி அய்யா அவர்கள்.


இன்று சென்னை தி நகர் பாண்டி பஜார் உள்ள அகன்ற நடைபாதைகளை காணும் போதும் நாம் இந்த இடங்களில் எப்படி இட நெருக்கடியில் நடந்து சென்று இருக்கிறோம் அதனை எந்தளவிற்கு மக்கள் நடமாட வசதியாக விசாலமாக மாற்றியிருக்கிறார்கள் என்று பார்க்கும் போது இது சென்னை தானா என்ற ஆச்சரியம் வருகிறது. இதற்காக நாம் அன்றைய சென்னை மாநகரத்தின் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்களை சந்தித்து மனு கொடுத்ததும்,  அவர் அது குறித்து மிகவும் அக்கறையுடன் நடவடிக்கை எடுத்ததும் பல் வேறு துறைகளுக்கும் நமது பாதசாரிகளுக்காக எழுதிய மனுக்களை அனுப்பியதும் நினைவுக்கு வருகிறது. 



The Letter from the Then Chennai Mayor in reply to our Petition on pedestrian safety


Please read the articles (links given ) that came in The Hindu in 2013 & 2019

https://www.thehindu.com/news/cities/chennai/pedestrian-plazas-soon-at-luz-church-road-pondy-bazaar/article4957255.ece 27th July 2013 - The then Chennai Mayor Mr. Saidai Duraisamy announced the plans to construct the Pedestrian Pathway.




நமது முயற்சி பலனளிக்க 6 ஆண்டுகளானாலும் இப்பொழுது இந்த அகன்ற பாதசாரிக்கான பாதையில் நடக்கும் போது சென்னையிலும் பல மேலை நாடுகளில் இருப்பது போல் பாதசாரிகளின் உயிர்களை மதித்து போடப்பட்ட பாதை நல்ல முன்னேற்றமாகவே காண்கிறோம்.

எந்த தேசத்தில் சாலை போக்குவரத்தை பொறுத்தவரை மிக மெதுவாக, அதிக பலமில்லாத , மாசு ஏற்படுத்தாத சாலை பயனாளர்களான பாதசாரிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதோ அதுவே உண்மையில் ஒரு பொறுப்புள்ள மனிதநேயமிக்க நாடாகும். இன்னமுன் சென்னையில் இன்ன பிற நகரங்களிலும் பாதசாரிகளை மதிக்கும் பண்பு இன்னமும் வளரவேண்டும். 

அதற்கு பொறுப்புள்ள குடிமக்களாகிய நாம் தொடர்ந்து அய்யா திரு டிராபிக் ராம்சாமி போல முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் , அதே போல் அரசாங்கத்திலும் அய்யா திரு. சைதை துரை சாமி போலவும் மற்றும் பல நல்ல அதிகாரிகள் போலவும் உதவுவதற்கு கண்டிப்பாக வருவார்கள். 

 A Country can be truly declared as developed only when the nation's least protected, low in physical strength, can walk without fear of safety on the streets. India with its huge population is finding it difficult to provide adequate safety to pedestrians. Hence we need to highlight, appreciate every single step taken towards pedestrian safety.  Pedestrians are not just human beings, even street dogs, cats, cows, buffaloes are also part of pedestrians only.

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students