ஆறா தேனீரா
ஒரு எளிமையான செய்கை மழை பொழிவை அதிகரிக்கும். தேனீர் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆனால் அதுவே அடிப்படை தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா ??? ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் உலகத்தில் இன்று அதிக மழை பெய்யும் இடமாக சொல்லப்படும் சிரபுஞ்சியை காட்டிலும் நமது நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வந்தது. ஆனால் இன்று நீலகிரியின் அடிவாரத்தில் இருக்கும் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது போலத்தான் டார்ஜீலிங்கிலும் மற்ற அசோமின் தேயிலை தோட்டங்களிலும். சமீபத்தில் இலங்கையில் உணவு பற்றாக்குறை என்ற செய்திகள் வருகின்றன. சிலோன் தேயிலை மிக பிரசித்தி பெற்றது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் மலைகளில் பல ஆண்டுகளாக தேயிலை தோட்டங்கள் செயல்படுவதால் மழை பொழிவு குறைந்து, விவசாயம் குறைந்து, உணவு பொருள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. சீனாவின் பொருளாதாரத்தின் அடிப்படையான தேயிலை வியாபாரத்தை குலைக்க தெற்காசியாவில் ஆங்கிலேயர் தெற்காசியாவில் பல இடங்களில் தேயிலையை அறிமுகப்படுத்தினார்கள். ஜப்பானின் தேயி...