ஆறா தேனீரா
ஒரு எளிமையான செய்கை மழை பொழிவை அதிகரிக்கும்.
தேனீர் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஆனால் அதுவே அடிப்படை தேவையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் என்றால் நம்ப முடிகிறதா ???
ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் உலகத்தில் இன்று அதிக மழை பெய்யும் இடமாக சொல்லப்படும் சிரபுஞ்சியை காட்டிலும் நமது நீலகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்து வந்தது. ஆனால் இன்று நீலகிரியின் அடிவாரத்தில் இருக்கும் கோவை மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இது போலத்தான் டார்ஜீலிங்கிலும் மற்ற அசோமின் தேயிலை தோட்டங்களிலும். சமீபத்தில் இலங்கையில் உணவு பற்றாக்குறை என்ற செய்திகள் வருகின்றன. சிலோன் தேயிலை மிக பிரசித்தி பெற்றது. பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால் மலைகளில் பல ஆண்டுகளாக தேயிலை தோட்டங்கள் செயல்படுவதால் மழை பொழிவு குறைந்து, விவசாயம் குறைந்து, உணவு பொருள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது.
சீனாவின் பொருளாதாரத்தின் அடிப்படையான தேயிலை வியாபாரத்தை குலைக்க தெற்காசியாவில் ஆங்கிலேயர் தெற்காசியாவில் பல இடங்களில் தேயிலையை அறிமுகப்படுத்தினார்கள்.
ஜப்பானின் தேயிலை கலாச்சாரமே அந்த நாடு பல சுனாமிகளை வருடந்தோறும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.
மழை எவ்வாறு ஏறபடுகிறது ??
நீராவி குளிரூட்டபடும் போது அது நீராகிறது. தண்ணீர் சூடேற்றப் படும் போது அது நீராவி ஆகிறது. இந்த நீராவிகளின் கூட்டத்தை நாம் மேகங்கள் என்கிறோம். இந்த மேகங்கள் உயர்ந்த மரங்களுடைய மலைகளை கடக்கும் போது அங்கிருக்கும் குறைந்த வெப்பத்தால் மெதுவாக தரையிறங்கி ஆறாகி ஓடுகிறது.
தேயிலை தோட்டங்களில் என்ன நடக்கிறது ??
சுலபாக இளந்தளிர் இலைகளை பறிக்க வேண்டும் என்பதற்காக தேயிலை செடிகளை உயரமான மரங்களாக வளர விடாமல் 3- 4 அடி உயரத்தில் வெட்டிவிடுகின்றனர். ஒவ்வொரு வருடமும் நீரானது மரங்களின் இலைகளில் இருந்தும் கடலில் இருந்தும் நீரானது ஆவியாகி விடுகிறது. இந்த நீராவிக் கூட்டம் உயரமான மரங்கள் உடைய மலைகளில் மழையாக பல மாதங்களில் இறங்கி ஆறாகின்றன. ஆனால் குட்டை ரக தேயிலை தோட்டங்கள் உடைய மலைகளில் வெப்பம் அதிகமாக உள்ளதால் மேகங்களால் மழையாக இறங்க முடியாமல் போய் அவைகளின் ஒரே இடத்தில் குவியும் போது அது புயல்களாக மாறி வெகு சில நாட்களில் வெள்ளமாக கொட்டி நிலச்சரிவு, வெள்ளம் அதன் சேதங்கள் என்று இயற்கை பேரழிவாக மாறுகிறது.
மழையை பெய்விக்க நீங்கள் எப்படி பொறுப்பெடுத்துக் கொள்ள முடியும் ???
இதற்காக தேயிலை உறபத்தியை தடை செய்ய சட்டம் எல்லாம் வேண்டாங்க. ரொம்ப எளிமையா நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேளையும் தேனீர் அருந்தாமல் வேறொரு இயற்கையோடு ஒத்து போகும் பானங்களை அருந்துங்கள். நீங்க டீ உறுஞ்சும் போதும் மழை மேகங்களை உறுஞ்சுகிறீர்கள் என்பதை உணறுங்கள்.
டீ குடிச்சு எனக்கு பழக்கமாகிவிட்டது என்பவர்கள் வீட்டிலேயே மிக எளிமையாக வளரக்கக் கூடிய துளசி, புதினா, கொத்தமல்லி, செம்பருத்தி போன்ற இலைகளையும் பூக்களையும் கொண்டே மணமிகு ஆரோக்கியமிகு சூடான பானங்களை அருந்தி புத்துணர்ச்சி பெறலாம். தேனீரை காட்டிலும் காபி கோக்கோ கூட பரவாயில்லை ஏனென்றால் காபி மற்றும் கோக்கோவை மரங்களாக வளர்த்து அதன் கொட்டைகளிலிருந்து தான் அந்த பானங்கள் தயாரிக்கிறார்கள்.
உலகத்தின் மிக பெரும்பான்மையான ஆறுகள் மலைகளிலிருந்து தான் உற்பத்தி ஆகின்றன. அதனால் ஆறுகளை மீட்க தேனீர் தவிருங்கள்.
சிறு துளி பெருவெள்ளம்
ஒவ்வொரு உறிஞ்சும் மேகங்களையே உறிஞ்சுகிறீர்கள்.
இன்று உலக ஆறுகள் தினம்(26 செப் 2021) உங்கள் பொறுப்பான சிறு முயற்சியினால் ஆறுகளை மீட்க முடியும்.
பின் குறிப்பு: டார்ஜிலிங்கில் என்ன நடக்கிறது என்பதை இந்த லிங்கை க்ளிக் செய்து படித்து பாருங்கள் https://www.downtoearth.org.in/news/climate-change/darjeeling-tea-faces-climate-risk-60567 நமது விஞ்ஞானிகள் தேயிலை உற்பத்தியே மழை குறைந்து வருவதால் எப்படி குறைந்து வருகிறது என்று புலம்ப ஆரம்பத்துவிட்டனர். இயற்கையோடு இயைந்து பொறுப்புடன் வாழ்வோம்.




Comments
Post a Comment
Please share your views, suggestions & contributions on our articles , activities to enable us to improve our presentation through this website. Your comments are very Valuable to us.
Responsible Citizens iYakkam welcomes your comments to bring in a responsible society