Quit Cities CORONA call

 


கரோனா பெருந்தொற்று சொல்லும் உரத்த செய்தி
CORONA calls for a change in Human attitude



நகர் விட்டு நகர் -  நெருக்கடியான நகர வாழ்க்கையில் தான் இந்த கரோனா கிருமி நோய் தொற்று அதிக உயிரிழப்புகளை நகரங்களில் தான் ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும் காற்றும் நீரும் பெருமளவு சுத்தமாக இருப்பதாலும் கிராமங்களில் பெருமளவு தொற்று பாதிப்பு  குறைவாக இருந்தது. அதனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் இதுவே கிராமங்களை நோக்கி திரும்ப வேண்டிய தருணம்.  நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் கூடிய விரைவில் ஒரு நல்ல கிராமத்தை தேர்ந்தெடுத்து குடியேற வேண்டும்.

நுகர்வை குறை -  இன்று பூமியை நாம் ஒரு பெரிய குப்பைக் கூளம் ஆக்கிவிட்டோம். மலைகளை வெறும் இரும்பாக, அலுமினிய ஃபாயில்லாக்கி , மண்ணை குடைந்து எண்ணை எடுத்து அதனை பிளாஸ்டிக் ஆக்கி கடல் வாழ் உயிரினங்களைக் கூட நிம்மதியாக வாழ விடாமல் செய்துவிட்டோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சி செய்வோம்.  அவசிய தேவையின்றி ஒரு பொருளையும் நாம் நுகர்தல் கூடாது.

கிராமம் புகு -  சென்னை பெருநகரத்தின் ( சுற்றுபுற மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது ) மொத்த பரப்பளவு 1189 சதுர கிமீ  மொத்த மக்கள் தொகை 1 கோடியே 30 இலட்சம் அதாவது 11,200 மக்கள் ஒரு சதுர கி.மீட்டரில் வசிக்கிறார்கள். 
திண்டுக்கல் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 6266 சதுர கி.மீட்டர் ஆனால் மக்கள் தொகை வெறும் 21 இலட்சம் மட்டுமே. அதாவது 335 மக்கள் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கிறார்கள். 
இது போல் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாட்டின் நிலப்பரப்பை கணக்கிட்டால் மிக மிக குறைவாக மக்களே வாழ்கின்றார்கள்.  அருகே அருகே வாழ்வது நோய் தொற்றையே வரவழைக்கும்.  அதனால் இந்த பூமியில் பரந்து விரிந்து வாழ்ந்து நமது நுரையிரல் நிரம்ப நல்ல காற்றை சுவாசிப்போம்.

S.NoDistrict NameDistrict Head QuartersArea (Sq.Km)Population(as per Census 2011)
 
1
2027.567542
7,54,894
2
2802.642877
25,56,244
3
462.2595648
46,46,732
4
4950.675923
34,58,045
5
3869.978807
26,05,914
6
4735.657327
15,06,843
7
6289.143008
21,59,775
8
6035.958688
22,51,744
9
3440.83766
13,70,281
10
1800.172276
11,66,401
11
3022.331231
10,64,493
12
5414.416924
18,83,731
13
3846.378763
30,38,252
15
1458.969404
16,16,450
16
1729.270352
18,70,374
17
3573.394518
17,26,601
18
1836.56692
5,65,223
19
4847.773181
16,18,345
20
4243.135967
13,53,445
21
2234.32
12,10,277
22
5205
34,82,056
23
4,086
13,39,101
24
2916.13
14,07,627
25
3396.57
24,05,890
26
3,066
12,45,899
27
3444.229647
37,28,104
28
2,161
12,64,277
29
4,621
17,50,176
31
3842.37
16,65,253
32
1792.92
11,11,812
33
5186.34
24,79,052
36
2222.094722
16,14,242
37
3725.54
20,93,003


பயிர் தொழில் கொள் :    இந்த  பூமி மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கவல்லது. ஆனால் மனிதர்கள் சிலரின் பேராசையால் இன்று பல கோடி மக்களும் பல விலங்குகளும் இந்த பூமியில் உணவில்லாமல் தவிக்கின்றனர்.  கிராமங்களில் விவசாயமும் மற்ற பூமியின் சுற்றுச் சூழலை பாதிக்காத தொழில்களில் மக்கள் ஈடுபட்டு வளமோடு வாழவேண்டும். மற்ற உயிர்களையும் வாழவிட வேண்டும்.

எடுத்துக்காட்டு இந்த இணையதளத்தை காணுங்கள் :

 பல்லுயிர் போற்று :  மேற்கு தொடர்ச்சி மலையில் பறக்கும் பட்டாம் பூச்சிகள் ஜப்பானின் தீவுகளில் மழை பொழிவிற்கு மிக அவசியம். இந்த பூமியில் தேனீக்கள் இல்லாது போனால் அடுத்த 4 வருடங்களில் இந்த உலகில் யாருக்கும் உணவே இல்லாமல் போய்விடும். கண்ணுக்கே தெரியாத இந்த கரோனா கிருமி இரண்டு வருடங்களாக மனிதர்களை ஓடி ஒளிய வைத்துவிட்டதை உணர்வோம். மனிதர்கள் இயற்கையை ஜெயித்து விட்டோம் என்ற இறுமாப்பை உடைத்தெறியவேண்டிய நேரம் இது. பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின்  ஆற்றலை போற்றி பணிந்து இயற்கையுடன் இயைந்து வாழ்வோம். 

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students