மலைமஞ்சனூர் மலை மரம் மழை
அக்டோபர் 3ம் தேதி மலையில் குழி எடுத்து விட்டு பின்னர் நன்றாக மழை பெய்த பின்னர் மரக் கன்று நடலாம் என்று முதலில் திட்டமிட்டோம். ஆனால் இயற்கை அன்று விடியற்காலை முதல் தூவானம் வீசியபடி எங்களை வரவேற்றது. மழை தூறலின் போது மலையில் ஏறலாமா என்று சிறிது தயங்கிய போது வானம் வெளுத்து எங்களை மலையேறி வரச் சொன்னது.
The Forest Way, Tiruvannamalai அமைப்பு மலையில் மரங்கள் நடுவதற்காகவே எங்களுக்கு அன்று ஆல அரச கன்றுகள் தந்து உதவினர். அந்த அமைப்பின் திரு . கார்த்திக் மற்றும் இயற்கை நிழற்படக் கலைஞர் திரு. குமார் எங்களுக்கு பெரிதும் உதவினர். மலைகளுக்கு யாராவது தீ வைத்தாலும் மரங்களுக்கு பரவாமல் தடுக்கும் முறைகள் அவர்கள் திருவண்ணாமலையில் பின்பற்றும் முறையை விளக்கி தந்தார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக எங்களுடன் இணைந்து இந்த மலையை பசுமையாக்கும் முயற்சியில் , இப்போது "பசுமை மலைமஞ்சனூர் பொறுப்புள்ள இளைஞர் சங்கமாக" உருவாகி திரு, செல்வ குமார், திரு சூர்ய மூர்த்தி மற்றும் நண்பர்கள் எங்கள் குழுவிற்கு உதவ முன் வந்தனர்.பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜெகதீஷ் முன் தினமே வந்து மரங்கள் கொண்டு சேர்பதற்கு பேரூதவி செய்தார் அவருடன் சங்க பொருளாளர் திரு. சுபாஷ் அவர்களும் வந்து மரங்கள் நட்டு மகிழ்ந்தார். 
பசுமை இந்தியாவின் இயற்கை வழி விவசாயி திரு. சிலம்பரசனும் அனைவரையும் உற்சாகப்படுத்தி குழி எடுப்பதிலும், மரங்கள் நட்டு மண் கட்டுவதில் பெரும் பங்காற்றினார்.
கடந்த இரண்டு வருட அனுபவத்தில் நட்ட ஒவ்வொரு அரசு ஆலமரங்களை சுற்றி உள்ள மஞ்சாம் புற்களை நீக்கிவிட்டு மரங்கள் தீ வைத்தாலும் பரவாத அளவிற்கு நீக்கி விட்டு நட்டோம். அது போல் இந்த முறை மழை பெய்யும் போது தண்ணீர் ஓடி வரும் தடத்தை தெரிவு செய்து அதில் அடிவாரம் முதல் உச்சி மலை வரை மரக்கன்றுகளுக்கு அருகே அகல குழி எடுத்து அதில் கற்களும் வைத்து அவற்றை சிறு தடுப்பணைகள் போல் ஆக்கி மழை பெய்யும் போது ஓடி வரும் தண்ணீர் பல நிலைகளில் நின்று வருவது போல் அமைத்தோம்.
மழையும் தொடர்ச்சியாக பல நாட்களில் விட்டு விட்டு பெய்து கொண்டிருந்ததால் குழியும் எடுத்து உடனே அந்த ஈரத்தில் நட்டும் விட்டோம்.
இன்னும் இந்த மலையில் பல நீர் வழி பாதைகள் உள்ளன அவற்றில் வரும் வாரங்களில் மரங்கள் நட திட்டமிட்டுள்ளோம்.
இன்னும் சில வருடங்களில் இந்த மலையே அடர்ந்த காடாகி மேகங்களை ஈர்த்து வருடம் முழுவதும் ஓடைகளும் அருவிகளும் உருவாக நாம் பொறுப்புடன் பணியாற்ற வேண்டி உள்ளது.
மரங்கள் நட்டு கிளம்பும் வரை நின்றிருந்த மழை இளைஞர்களின் பொறுப்பான நற்செயலை பாராட்டும் விதமாக நாங்கள் கிளம்பியவுடன் மரங்களுக்கு உயிர் தண்ணீர் கொடுத்து ஆசீர்வதித்தது.







வணக்கம்..
ReplyDeleteமரங்கள் உங்கள் பெயர் சொல்லும்...
வாழ்த்துகள்...
ஆறுகள் ஓடி நாடு வளம் பெற வேண்டும்.
DeleteFuture generations will fondly remember Responsible citizens Iyakkam for it's tremendous work in preserving the nature. Great 👌😊
ReplyDeleteThis is our responsibility . We are enabling the Nature to give us in plenty
Delete