Green village பசுமை பாச்சார்
பசுமை பாச்சார் Green Village
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் கிராமங்கள் தோறும் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் என்று பயணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்பாச்சார் கிராமத்தில் 15 லிருந்து 29 வயதுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து "பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் " கடந்த டிசம்பர் மாதம் 24, 2020 லே நேரு யுவ கேந்திராவில் பதியப்பட்டது.
இது கிராமத்தில் உள்ள அனைத்து இளைஞர்களுக்குமானது என்பதால் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டிற்கு ஒரு மரம் வழங்க வேண்டும் என்று பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தில் முடிவெடுத்தது. அதனை இளைஞர்கள் சங்கம் மூலமாக வீடுகள் தோறும் வழங்கவும் முடிவு செய்யபட்டது.
அதன் படி இதனை ஒரு விழாவாக கிராம நிர்வாக அலுவலர் திருமதி. காஞ்சனா, பிரம்ம குமாரிகள் இயக்கத்திலிருந்து பிரம்மா குமாரி கீதா அவர்களும், மேல்பாச்சார் ஊராட்சி மன்ற தலைவர் திரு துர்கா ராமன் மற்றும் ஊர்க் கவுண்டர் புரவலர் திரு. இராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் துவக்குனர் திரு ச. கிருஷ்ண குமார், கிராமங்களில் ஆறுகள் ஓடவேண்டிய அவசியத்தை அதனால் ஊர் எப்படி பொறுப்பான வளர்ச்சி பெறும் என்றும் முன்னாட்களில் நதியினால் உண்டான நாகரீகங்களான சிந்து சமவெளி நாகரிகம், காவேரி பண்பாடுகள் ஆகியவற்றை விளக்கினார். ஆறுகள் ஓடி பசுமை செழிக்க வறுமைகள் நீங்கி அன்பும் அறமும் பெருகும் அனைவரும் வளமாக வாழலாம் என்றார்.
மேலும் மேல்பாச்சார் என்ற ஊரின் பெயர் மேற்கிலிருந்து பாய்ந்த ஆறு என்ற பெயரின் உள்ளூர் சொல்லாடலில் மறுவிய பெயர் தான் என்றார். மேலும் இளைஞர்கள் இந்தஆற்றினை மீட்டெடுத்து ஊரை வளப்படுத்துவதே அவர்களின் முதல் பணி என்றார். இதனாலேயே பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் மலைகள் தோறும் மரங்கள் திட்டத்தை திருவண்ணாமலை மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் செயல்படுத்தி வருவதாக விளக்கினார்.
அதன் முதல் படியாகவே வீடுகள் தோறும் மரங்கள் வளர்க்கும் முயற்சி என்றார்.
மேல்பாச்சார் இது வரை மரங்கள் வெட்டும் ஊராகவே அறியப்பட்டது. இந்த பார்வையை மாற்ற இளைஞர்கள் முடிவெடுத்துள்ளனர். கிராமத்தில் கலைகள் விளையாட்டுகளை கொண்டாடி வாழ ஒரு சங்கம் வேண்டும் என்பதே சங்கத்தின் அடிப்படை நோக்கம். பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கத்தின் இலச்சினையாக ( Logo ) பனை மரத்தை தான் போட்டிருப்ப்தாகவும் - பனைப் போல் வாழ்வோம் வாழ்விப்போம் எனபதே கொள்கை என்றார்.
தருமம் என்ற சொல்லே தரு (மரம்) என்ற சொல்லிலிருந்து வந்தது. பல வளங்களை தருவதால் பல உயிர்களுக்கு வாழ்வளிப்பதால் மரங்களுக்கு தரு என்ற சொல் உருவானது என்ற கிருஷ்ண குமார், தருமபுரியிலிருந்து நமக்கு நன்மைகள் பல செய்து தரவே கிராம நிர்வாக அலுவலர் திருமதி. காஞ்சனா மோத்தக்கல்லில் பதவி ஏற்றுள்ளார் அவரை இளைஞர்களுக்கு வழிக்காட்டி பேசுமாறு அழைத்தார்.
கிராம நிர்வாக அலுவலர் உடனடியாக கிராமத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். மேல்பாச்சாருக்கு 500 மரக் கன்றுகள் தருவதற்கும் ஏற்பாடு செய்து தருவதாகச் சொன்னார்.
ஊராட்சி மன்ற தலைவர் திரு துர்கா ராமன் இங்குள்ள கோவில்களில் எல்லாம் மரங்கள் நட தனது பங்களிப்பை தந்தார்.
ஊர்கவுண்டரும் தன் அன்பளிப்பாக ஆயிரம் மரக்கன்றுகளை தருவதாக உறுதியளித்தார். அதற்குரிய இடத்தினையும் தேர்தெடுத்து தன்னிடம் வருமாறு இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பிரம்மா குமாரி கீதா உடல் நலம் மனம் நலம் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்து உரைத்தார். தங்கள் அமைப்பின் மூலம் கிராமத்தில் அனைத்து வயதினர், ஆண்கள், பெண்கள் யோகா சொல்லி தர தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஆரோக்கியமான கிராமமே வளமான கிராமம் என்றார்.
சங்க தலைவர் திரு வெங்கடேஷ், செயலாளர் திரு. ஜெகதீஷ் அனைத்து இளைஞர்களையும் சங்கத்தில் இணைய அழைப்பு விடுத்தனர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினர். சங்கம் சார்பில் வந்திருந்த விருந்தினர்களுக்கு மற்ற விழாக்களை போல் பொன்னாடைகள் போர்த்தாமல் முக்கனி மரக்கன்றுகள் அன்புடன் திருமதி . கனகா தசரதன் மற்றும் திருமதி. விமலா வெங்கடேசன் வழங்கினார்கள்.
அதன் பின் பெருமாள் அப்பன் கோவில் அருகே வந்திருந்த விருந்தினர்கள் கரங்களினால் மரக் கன்றுகள் நடப்பட்டது.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கத்தின் சார்பாக கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மரம் என்ற வகையில் இந்த விழாவிற்கு வந்திருந்த் சிலருக்கு நேரடியாக விருந்தினர்கள் மூலமாக வழங்கப்பட்டது. மற்ற அனைத்து வீடுகளுக்கும் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொரு வீடாக சென்று சங்கத்தின் நோக்கங்களை விளக்கி மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி மரக் கன்றுகளை கொடுத்தும் சில வீடுகளில் நட்டும் கொடுத்து விட்டு வந்தனர்.
இது போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள் சமூக சேவையாற்ற புறப்பட்டால் இந்தியா மிக பொறுப்புள்ள நாடாக பரிமளிக்கும்.
























உங்கள் நல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteGreat going. All the best
ReplyDeleteThank You
DeleteBest moments
ReplyDeleteBest moments
ReplyDeleteGreat bro best motivation
ReplyDeleteGreat work and inspiring youngsters will give the society a green cover to the villages. Hats off to you for tour continous efforts, in creating Tree culture.
ReplyDeleteGreat work and inspiring youngsters will give the society a green cover to the villages. Hats off to you for tour continous efforts, in creating Tree culture.
ReplyDeleteGreat work and inspiring youngsters will give the society a green cover to the villages. Hats off to you for tour continous efforts, in creating Tree culture.
ReplyDeleteGreat work and inspiring youngsters will give the society a green cover to the villages. Hats off to you for tour continous efforts, in creating Tree culture.
ReplyDeleteThank you
DeleteGreat ...
ReplyDeletethank you
Delete