Quit Cities CORONA call
கரோனா பெருந்தொற்று சொல்லும் உரத்த செய்தி CORONA calls for a change in Human attitude நகர் விட்டு நகர் - நெருக்கடியான நகர வாழ்க்கையில் தான் இந்த கரோனா கிருமி நோய் தொற்று அதிக உயிரிழப்புகளை நகரங்களில் தான் ஏற்படுத்தியுள்ளது. கிராமங்களில் மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும் காற்றும் நீரும் பெருமளவு சுத்தமாக இருப்பதாலும் கிராமங்களில் பெருமளவு தொற்று பாதிப்பு குறைவாக இருந்தது. அதனால் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் இதுவே கிராமங்களை நோக்கி திரும்ப வேண்டிய தருணம். நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் கூடிய விரைவில் ஒரு நல்ல கிராமத்தை தேர்ந்தெடுத்து குடியேற வேண்டும். நுகர்வை குறை - இன்று பூமியை நாம் ஒரு பெரிய குப்பைக் கூளம் ஆக்கிவிட்டோம். மலைகளை வெறும் இரும்பாக, அலுமினிய ஃபாயில்லாக்கி , மண்ணை குடைந்து எண்ணை எடுத்து அதனை பிளாஸ்டிக் ஆக்கி கடல் வாழ் உயிரினங்களைக் கூட நிம்மதியாக வாழ விடாமல் செய்துவிட்டோம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் மறுசுழற்சி செய்வோம். அவசிய தேவையின்றி ஒரு பொருளையும் நாம் நுகர்தல் கூடாது. கிராமம் புகு - சென்னை பெ...