Preparation for Tree Planting during NE Monsoon


 மேல்பாச்சார் கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் 21,22, 23 மே 2021 மூன்று நாட்கள் பெய்த மழையை பயன்படுத்தி வரப் போகும் வடக்கிழக்கு பருவ மழைக்காலத்தில் (செப் - டிசம்பர் 2021) மரங்கள் நடுவதற்கு முன்னேற்பாடாக பெருமாள் அப்பன் கோவில் எதிரே இருக்கும் மலைக்குன்றில் மரங்களுக்காக குழி எடுக்க முதற் கட்ட அடையாள எல்லைக்காக சில குழிகளை இரண்டு அடி ஆழத்திற்கு எடுத்து பசுமை பாச்சார் பொறுப்புள்ள இளைஞர்கள் சங்கம் தலைவர் திரு வெங்கடேஷ் மற்றும் செயலாளர் திரு ஜெகதீஷ் மற்றும் இளைஞர்கள் குழிகள் எடுத்துள்ளனர்.  

இதனை போன்று ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக 100 நாள் வேலை திட்ட பணியின் மூலம் 500 குழிகள் எடுக்க திட்டமிட்டு வருகிறோம். இந்த மலையின் ஒரு பகுதியை இந்த வருடத்தின் பருவமழையில் ஒரு அடர்த்தியான காட்டினை உருவாக்க முயன்று வருகிறோம். இளைஞர்களுடன் கிராம பொது மக்களும் இணைந்து மரங்கள் நட்டு, வளர்த்து, பாதுகாத்து  கிராமத்தில் பசுமையை கூட்ட வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வின் போது 21.5.21 அன்று உடல நீத்த மரங்காவலர் திரு. சுந்தர்லால் பகுகுணா அவர்களின் நினைவாக ஐந்து புங்கன் மரக்கன்றுகள் 23.5.21 அன்று நட்டு அவரின் இயற்கை பணியை தொடர உறுதி பூண்டார்கள். 

 - பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம்

To Prepare for the tree planting during the North East Monsoon season, Which is likely to happen in Tamil nadu between September to December 2021, the Youth of Melpachar village in Tiruvannamalai District, Tamilnadu , used the three days of Summer rain to start the digging of pits on the Perumal Appan Kovil Hillock on 23. 5. 2021. 

We have already discussed with the department of Rural Development for utilising the labourers of MGNREGS scheme to dig the 500 pits along the slopes of the hillock. The youth led PPPES President Mr. Venkatesh & Secretary Mr. Jegadeesh have earmarked the areas to be used for trees plantation. 

The youth club also planted 5 Pungan tree saplings in mark of respect for the Environmental Protectionist Shri. Sunderlal Bahaguna , who had left his mortal coil on 21.5.21.

Responsible Citizens iYakkam

Comments

Popular posts from this blog

மரம் நடுதல் புதிய சகாப்தம் Tree Planting New Chapter

திருவண்ணாமலையில் வன விலங்குகளுக்காக பழ மரங்கள் Fruit Trees for wild animals at Tiruvannamalai

Road safety Audit by Students