No meat to feed everyone
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்.....
மகாகவி பாரதியின் கூற்றின் படி "ஜகத்தினை அழித்திடுவோம்" என்று நாம் கிளம்பியிருந்தால் இன்று நாம் வாழ இந்த உலகமே இருந்திருக்காது.
வருடா வருடம் பசியினால் இறக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை நாம் உணவில் கை வைக்கும் போது ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்துகிறது.
நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஒதுங்கி போக முடியுமா ? நாம் அனைவரும் நாம் உண்ணும் ஒவ்வொரு கவளத்தையும் பொறுப்புடன் உண்டோமானால் அனைவருக்கும் பூமி போதுமான உணவை அளிக்கிறது.
உணவில்லாதவருக்கு உணவளிக்க யாராவது பண உதவி செய்ய வேண்டுமா ????
உணவு தானியங்கள், இறைச்சிகள் தானமாக அளிக்க வேண்டுமா ????
உணவு பற்றா குறையா ? சில விஞ்ஞானிகள் அனுமானிப்பது போல் வேற்று கிரகத்திற்கு குடி போக வேண்டுமா ???
வேறெந்த கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்ற ஆராய்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகள் செலவழிக்க வேண்டுமா ????
நிச்சயம் இவ்வளவு கடினமான பண விரயம் ஆக கூடிய வழிகள் தேவையில்லை. நமது சக மனிதர்கள் மீதும் மற்ற உயிர்களிடத்தும் அன்பும் அக்கறையும் தான் தேவை.
பொறுப்புடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சித்தால் இந்த பூமியில் ஒருவரும் பட்டினியாக இறக்க நேரிடாது.
கிழே உள்ள படத்தில் ஒரு கிலோ உணவை தயாரிக்க எவ்வளவு நிலம் தேவைப்படுகிறது என்று பார்க்கலாம் .
ஒரு கிலோ மாட்டு கறி உற்பத்தி செய்ய 30 சதுர மீட்டர் அதாவது முக்கால் சென்ட் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ காய்கறி உற்பத்தி செய்ய 1 சதுர மீட்டர் இடம் கூட தேவைப்படுவதில்லை. குறைந்தபட்சம் ஒரு கிலோ மாட்டு மாமிசம் உற்பத்தி செய்யக் கூடிய இடத்தில் 30 கிலோ காய்கறியோ, 30 கிலோ பழங்களோ உற்பத்தி செய்ய முடியும். ஒருவருக்கு கால் கிலோ உணவு தேவை என்றால் 1 சென்ட் நிலத்தில் 40 கிலோ காய்கறிகள் உற்பத்தி செய்தால் 160 பேர் உண்ண முடியும், அதே மாட்டு மாமிசமாக இருந்தால் 5 பேர் தான் உண்ண முடியும். அதாவது காய்கறி உணவென்றால் 155 பேருக்கு கூடுதலாக உணவளிக்கலாம், பட்டினியால் வாடாமல் தவிர்க்கலாம்.
நாம் சாப்பிடும் உணவில் அது அசைவமாக இருந்தாலும் உலகளவில் நடந்த ஆராய்ச்சியில் சைவ (காய்கறி) உணவின் பங்களிப்பு 83% சதவிகிதம் என்றால் அசைவ (மாமிச ) உணவின் பங்களிப்பு 17% சதவிகிதம் தான். என்ன தான் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி என்று நாம் அழைத்தாலும் - அந்த உணவில் மாமிச சதவிகிதம் குறைவு. அசைவ உணவு உண்பவர்களும் தங்கள் உணவில் அதிகம் உண்பது சைவ காய்கறி உணவுகளே .
கீழே கொடுத்துள்ள படம் நமக்கு தெரிவிக்கும் செய்தி 17 சதவிகிதம் மட்டுமே நமது உணவுத் தேவையில் தரும் விலங்குகளும், மாமிச கறி தேவைக்காக விவசாயம் செய்யக்கூடிய வாய்ப்புள்ள நிலங்களில் 77% நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் பல ஆராய்ச்சியாளர்கள் மாமிசம் கலந்த உணவு உண்ண வேண்டும் என்றால் நமக்கு மேலும் நிலங்கள் தேவைப்படும். அனைவருக்கும் மாமிச உணவு என்றால் ஒருவரும் பசியால் இறக்க கூடாது என்றால் நமக்கு இந்த பூமி பத்தாது என்று நிலாவில் வாழலாமா? செவ்வாயில் வாழலாமா ? என்று அளவிற்கு மீறிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். காய்கறி உணவு அனைவரும் உண்டால் இன்று நமக்கு இருக்கும் நிலங்களை கொண்டு அனைவருக்கும் உணவளிக்க முடியும் . ஒரு மனிதர் கூட பசியால் பட்டினியால் இறக்க நேரிடாது.
அதற்கு நேரிடையாக மனிதர்கள் மரக்கறி உணவை மட்டும் உண்டு வாழ்ந்தால் மனிதர்கள், காட்டு விலங்குகள் அனைவருக்கும் இந்த பூமியில் போதுமான உணவு உள்ளது.
காய்கறி உணவுகள் மாமிச உணவுகளை போல் புரதச் சத்து தராது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உள்ளது . ஆனால் உண்மையில் காய்கறி உணவுகள் பலவிதமான சத்துக்கள் தருகின்றன . ஹைதி தீவுகளில் பூகம்பம் வந்து மக்கள் வீடுகள் இழந்து தவித்த போது க்யூபா நாட்டின் நீண்ட கால அதிபராக விளங்கிய திரு . பிடல் காஸ்டெரோ தமிழ் நாட்டின் மிகவும் பிரியமான பயிரான உலகளவில் ஒரு அற்புத மூலிகையாக கருதப்படும் முருங்கையை தான் தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு ஊட்டச் சத்து மிக்க உணவாக அளித்தார்,
முட்டையை விட 36 மடங்கு அதிக மெக்னீசியம்
பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம்
வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிக பொட்டாசியம்
கேரட்டை விட 10 மடங்கு அதிக விட்டமின் ஏ
தயிரை விட 9 மடங்கு அதிக புரதம்
கீரையை விட 25 மடங்கு அதிக இரும்புச் சத்து
ஆரஞ்சை விட 7 மடங்கு அதிக விட்டமின் சி
உலக வெப்பயமாதலும் வளர்ப்பு மிருகங்களும்
இது மட்டுமில்லை மாமிச உற்பத்தியினால் உலகம் அதிகம் வெப்பமாகிறது. கரியமில வாயு உற்பத்தியில் அனல் மின் நிலையங்கள் , பெட்ரோலிய பொருட்களில் இயங்கும் வாகன புகைகளை விடவும் விலங்குகளின் மாமிச பண்ணைகளினால் உற்பத்தி செய்யப்படும் மீத்தேன் வாயுக்களினால் பூமி அதிக வெப்பமயமாவதாக புவி வெப்பமயமாதல் அறிஞர்கள் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
| ref : animal agriculture position paper - Climate Healers |
காட்டிலேயே இயல்பாக இயற்கையாக மனிதர்களுடன் எந்த தொடர்பிலும் இல்லாமல் வளரும் மிருகங்கள் இயற்கைக்கு எந்த ஊறும் விளைப்பதில்லை . அவைகள் பசியின் தேவைக்கேற்ப உண்டு வாழ்கின்றன.
ஆனால் மனிதர்களால் இறைச்சிக்காகவும் பால் பொருட்களுக்காகவும் வளர்க்கப்படும் விலங்குகளால் இந்த பூமியில் பல மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன . மாடுகள் பலவும் செயற்கையாக கருவூட்டப்பட்டு அதுவும் பெண் கன்றுகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. பால் நின்றவுடன் வெட்டுக்கு அனுப்பப்படுகின்றன . இந்த முறையில் மனிதர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விலங்குகள் ஒரு இயந்திரங்கள் போல் பயன்படுத்தப்பட்டு இயற்கை வளத்தின் அழிவிற்கு காரணிகள் ஆகின்றன . கோழிகள் வெறும் எடைக்காகவே இயற்கைக்கு விரோதமாக அடைத்து வளர்க்கப்பட்டு செயற்கையாய் ஊசிகள் , விஷங்கள் ஏற்றப்பட்டு மனிதர்கள், விலங்குகள், பூமி அனைவருக்கு கேடான ஒரு விஷ வட்டத்தை உருவாக்கிவிட்டோம் .
ஆடுகள் , பன்றிகள் என்ற அனைத்துமே மனிதர்கள் பயன்பாட்டிற்க்கு மட்டுமே என்று இயற்கைக்கு விரோதமாகவே வளர்க்கப்படுகின்றன.
இயற்கை அருமையாக ஒரு உயிர் சங்கிலியை உணவு சங்கிலியை மண் புழு முதற் கொண்டு யானை , சிங்கம் போன்ற பெரிய மிருகங்கள் வரை ஏற்படுத்தி இருக்கிறது.
வெறும் தாவரங்களையே உண்ணும் விலங்குகளால் காட்டின் பசுமை குறைந்து அதனால் மழை பொழிவு குறைந்து ஆறுகளின் ஓட்டமே பாதிக்கப்பட்டு நாட்டின் வளங்கள் குறைகின்றன . ஆடு , மாடு , பன்றி , கோழிகள் மட்டுமே மனிதன் செயற்கையாக எண்ணிக்கையை கூட்டி வளர்ப்பதால் இயற்கை சூழலியியல் மிகவும் பாதிப்படைகிறது.
அமெரிக்காவில் ஒரு வனப் பகுதியில் 85 ஆண்டுகள் ஓநாய்கள் இல்லாது இருந்து மீண்டும் ஓநாய்களை, நரிகளை விட்டபின் ஒரு ஆறே எப்படி மீண்டு வந்தது என்று இந்த காணொளி மிக தெளிவாக விளக்குகிறது.
ஆனால் மனிதர்கள் நகரவாசியான பிறகு தனது உணவை உயிர் வாழ தேவையை தாண்டி ருசிக்காக மாற்ற முயற்சித்து வருவது இந்த பூமிக்கு பெரும் ஆபத்தாக போய் விட்டது.
வெறும் 12 சதவிகித நிலத்திலேயே மனித குலம் வாழ தேவையான உணவை இயற்கை அளித்து வந்தாலும் தனது பேராசைக்கும் பிறர் உயிரினங்களின் மேல் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்த முயல்வதால் இன்று இயற்கையை மீறின எண்ணிக்கையில் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இந்த வளர்ப்பு விலங்குகளை வளர்க்க நல்ல விளை நிலங்கள் பலவும் அவைகளின் உணவு தேவைக்காகவே போய்விடுகிறது. இதனால் இந்த பூமியால் தாங்க முடியாத அளவிற்கு கரியமில வாயு உற்பத்தி ஆகி இயற்கையாய் மழை பொழிவது கூட மாறி பூமியை வேகமாக குளிர்விக்க குறைந்த நாட்களில் அடை மழைகள் பெய்து வெள்ளத்தினால் அவதிப்படுகிறோம் .
நேரடியாக மனிதர்களும் தாவர உணவுகளே உண்டு வாழ்ந்தால் அனைத்து மனிதர்களுக்கும் இந்த பூமியில் வயிறார உண்ண உணவு உள்ளது. எல்லா உயிரினங்களுக்கும் போதுமான உணவு பூமியால் வழங்க முடியும்.
ஆனால் நாம் சக மனிதர்களின் பசியை உணராமல் நமது ருசிக்காக உணவு உற்பத்தியை கையில் எடுத்ததால் பூமியில் பல மனிதர்கள் , பல விலங்குகள் சரியான உணவின்றி மடிகின்றனர் .
மனிதனின் இயற்கையை மீறிய செயல் செய்யும் போது பூமி தன்னை அழிக்க முற்படும் மனிதனை அழிக்கவும் கிருமிகளையும் நோய்களையும் இயற்கையின் விரோதிகளை அழிக்க படைக்க வேண்டி வருகிறது.
ஒரு பக்கம் சில கொழுத்தவர்கள் தனது தேவைக்கு மீறியதை சேர்த்து வைத்துக் கொண்டு உணவை வீணடித்து வருகிறோம் அதே சமயம் பலரும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் மாண்டு போகிறோம்.
உலக அளவில் வருடந்தோறும் பல கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. சீனாவும் , ஐக்கிய அமெரிக்காவும் வீணடிப்பதில் முன்னணியில் உள்ளது. ஆனால் ஜெர்மனி நாட்டில் சமுதாய பாதுகாப்பு துறை மூலமாக உணவு வீணடிப்பதற்கு உணவு தண்ட அபராதம் வசூலிக்கப்படுகிறது. உணவகங்களில் நீங்கள் பணம் செலுத்தி உணவு உண்டாலும் வாங்கிய உணவில் மீதம் வைத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது. "பணம் உங்களுடையது என்றாலும் நாட்டின் வளங்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை" என்று சமுதாய பொறுப்புடன் செயல்படுகிறது ஜெர்மானிய நிர்வாகம்.
இந்த நிலை மாற பொறுப்புள்ள மனிதர்களாக நமது சக மனிதர்களிடத்தும் சக உரியினங்கள் இடத்தும் அன்பு செய்து வாழ தாவர உணவுகளை மட்டும் உண்டு வாழ்வோம் வளத்துடன் . இயறக்கைக்கு திரும்பும் பாதை இதுவே .
இதனை வலியுறுத்தியே தமிழ் மொழியின் ஒப்பில்லா புலவர் திருவள்ளுவரும் "புலால் மறுத்தல்" என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை இயற்றி இயற்கை வழி உணவின் அவசியத்தை பல்லாயிரம் ஆண்டுகள் முன்பாகவே வழிக் காட்டியுள்ளார்.
கடந்து நூற்றாண்டில் வாழ்ந்து காட்டி வழிகாட்டிய அருட்பிரகாச வள்ளலாரும் வழிக் காட்டியுள்ளார்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். (௨௱௬௰ - 260)
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் 2021



Statistics shown on people dieing because of hunger is saddening, alarming, cause of serious concern.
ReplyDeleteThe subject of taking plant based food is mostly considered as moral subject for many and depends upon people how they take it. Within a family, opinion may vary. All of People having great respect to our Thiruvalluvar, Vallalar, whether follow his principles quoted, we are not sure. The change has to come within.
Dear Venkat Ji ! Now the people dying due to hunger is more important and we have a simple solution on had to ensure everyone's well being. Sacrifice of leaving the meat is comparatively is small compared to losing the life itself.
Deleteபட்டினியால் இறப்பவர்களின் புள்ளிவிவரங்கள் வருத்தமளிக்கிறது, கவலையளிக்கிறது.
ReplyDeleteதாவர அடிப்படையிலான உணவை உட்கொள்வது என்பது பெரும்பாலும் பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கை விஷயமாகக் கருதப்படுகிறது மற்றும் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒரே குடும்பத்தில், கருத்து மாறுபடலாம்.
திருவள்ளுவர், வள்ளலார் மீது அளப்பரிய மரியாதை வைத்துள்ள மக்கள் அனைவரும் அவருடைய கொள்கைகளைப் பின்பற்றுகிறார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை. மாற்றம் ஒருவருக்கு அவர் உள்ளே இருந்து வர வேண்டும்.
அனைவருக்கும் உணவு வேண்டுமென்றால் அனைவரும் சைவ உணவிற்கு மாற வேண்டும்
Delete